பொது செய்தி

இந்தியா

அரசு மின்சார வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் கடிதம்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: 'மாநில அரசுகள் தங்களது வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும்' என, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.எரிபொருள் வளம் காலியாகிக் கொண்டிருக்கிறது. எரி பொருட்களின் விலை தினமும் உயர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இது போன்ற காரணங்களால், கடந்த 10
Center,  ministers, chief ministers,  EVs, அரசு வாகனங்கள், மின் வாகனங்கள், மத்திய அமைச்சர், கடிதம், ஆர்கே சிங்,

புதுடில்லி: 'மாநில அரசுகள் தங்களது வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும்' என, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

எரிபொருள் வளம் காலியாகிக் கொண்டிருக்கிறது. எரி பொருட்களின் விலை தினமும் உயர்ந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. இது போன்ற காரணங்களால், கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.


latest tamil news


இந்தநிலையில் மத்திய மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்றக்கோரி மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே. சிங் கடிதம் எழுதியுள்ளார்.


latest tamil news


அந்த கடிதத்தில், 'அரசே தனது அனைத்து வாகனங்களையும் மின்சார வாகனங்களாக மாற்றும் நடவடிக்கை பொது மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். அதோடு மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தொடங்கியுள்ள 'மின் எரிபொருளுக்கு' மாறும் பிரச்சாரத்த்தின் பகுதியாக இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
28-ஆக-202110:42:26 IST Report Abuse
S.Baliah Seer மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இப்பகுதியில் முன்னமேயே இக்கருத்தை எழுதியிருந்தேன். துணிச்சலும், நேர்மையுமே நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்.
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
28-ஆக-202108:23:22 IST Report Abuse
VENKATASUBRAMANIAN பேட்டரி லைப் சார்ஜிங் facility விலை போன்றவைதான் பிரச்சினை. அரசு இதில் கவனம் செலுத்தினால் எல்லோரும் மாறி விடுவார்கள்
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
28-ஆக-202108:04:47 IST Report Abuse
rajan மாநில அரசுகள் தங்களது வாகனங்கள் அனைத்தையும் மின்சார வாகனங்களாக மாற்ற வேண்டும்' என, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களுக்கு மத்திய மின்சக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.- முதலில் மோடி அவரது அனைத்து அமைச்சர்களும் அனைத்து ஒன்றிய அரசு அதிகாரிகள் அனைவரும் செய்து காட்டிவிட்டு பிறகு மாநிலங்களுக்கு அறிவுரை செய்ய தயாரா
Rate this:
28-ஆக-202113:39:34 IST Report Abuse
Balaji Radhakrishnan ஒரு நல்லது செய்ய சொன்னா ஏன் தேவையில்லாத கேள்வி கேட்கிறீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X