மூன்று பேருக்கு குண்டாஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று பேருக்கு குண்டாஸ்

Added : ஆக 27, 2021
Share
பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகே பில்பருத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 80. இவருடைய மனைவி சுலோச்சனா, 75, ஓய்வுபெற்ற ஆசிரியை. இருவரையும் கடந்த ஜூலை, 12ல் இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இது தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்து, அதேபகுதியை சேர்ந்த வேலவன், 24, பிரகாஷ்ராஜ், 19, முகேஷ், 19, ஹரீஸ், 20, சந்துரு, 22, எழிலரசன், 26, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த இரட்டை கொலை

பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி அருகே பில்பருத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 80. இவருடைய மனைவி சுலோச்சனா, 75, ஓய்வுபெற்ற ஆசிரியை. இருவரையும் கடந்த ஜூலை, 12ல் இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இது தொடர்பாக பொம்மிடி போலீசார் வழக்குப்பதிந்து, அதேபகுதியை சேர்ந்த வேலவன், 24, பிரகாஷ்ராஜ், 19, முகேஷ், 19, ஹரீஸ், 20, சந்துரு, 22, எழிலரசன், 26, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய பிரகாஷ்ராஜ், முகேஷ், ஹரிஷ் ஆகிய மூன்று பேர் மீதும், குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட எஸ்.பி., கலைச்செல்வன் பரிந்துரைத்தார். இதன்படி, தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதால், மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X