பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தர்மபுரி: கூட்டுறவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு, தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுறது.தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும், முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கடந்த, 16 முதல்

தர்மபுரி: கூட்டுறவு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு, தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பட்டய பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுறது.
தர்மபுரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் பட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளும், முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் கடந்த, 16 முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, ஜூலை, 1ல் அன்று குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. இப்பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் பட்டயப்பயிற்சி ஆகிய சான்றிதழ்கள், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் வழங்கப்படும். பயிற்சிக்கான விண்ணப்பங்களை, www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். செப்., 15ம் தேதி வரை, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். அசல் சான்றிதழ்கள் மற்றும் பயிற்சி கட்டணம், 14 ஆயிரத்து, 850 ரூபாயை செலுத்தி பயிற்சியில் சேரலாம் என, மண்டல இணைப் பதிவாளர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு, 94892 - 40485 என்ற மேலாண்மை நிலைய மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X