பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு சொத்துக்கு 'சீல்' வைக்கும் பணி நிறுத்தம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, சிவசுப்பிரமணி ஸ்வாமி கோவிலுக்கு சொந்தமாக, தலைமை தபால் நிலையம் அருகே கடைகள் உள்ளன. இதில், 856 சதுர அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. அந்த இடத்திலுள்ள கடைக்கு, 'சீல்' வைக்க நடவடிக்கை எடுத்தனர். அந்த இடத்தை பயன்படுத்திய குத்தகைதாரர், இதற்காக, தான் செலுத்திய வாடகை குறித்தும், 'சீல்' வைக்க எதிர்ப்பு

தர்மபுரி: தர்மபுரி, சிவசுப்பிரமணி ஸ்வாமி கோவிலுக்கு சொந்தமாக, தலைமை தபால் நிலையம் அருகே கடைகள் உள்ளன. இதில், 856 சதுர அடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்தது. அந்த இடத்திலுள்ள கடைக்கு, 'சீல்' வைக்க நடவடிக்கை எடுத்தனர். அந்த இடத்தை பயன்படுத்திய குத்தகைதாரர், இதற்காக, தான் செலுத்திய வாடகை குறித்தும், 'சீல்' வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பிரகாஷ் தலைமையில், வருவாய்த்துறையினர், போலீசார் பாதுகாப்புடன், இந்த இடத்தை, 'சீல்' வைக்க நடவடிக்கை எடுத்தனர். இதற்கு கடைகாரர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நீதிமன்றம், 'சீல்' வைக்கும் பணியை நிறுத்த நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து, 'சீல்' வைக்கும் பணி கைவிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X