முடிவெடுக்க அனுமதிக்காவிட்டால் கட்சிக்கு அழிவு ஏற்படும்: கொதிக்கும் சித்து

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் காஷ்மீர் மற்றும் தலிபான்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களை நீக்கும்படி முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரித்தார். இதனால் மீண்டும் இரு தரப்பிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. “என்னை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்காவிட்டால், அது கட்சிக்கு அழிவை ஏற்படுத்தும்” என சித்து

சண்டிகர்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர்கள் காஷ்மீர் மற்றும் தலிபான்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களை நீக்கும்படி முதல்வர் அமரீந்தர் சிங் எச்சரித்தார். இதனால் மீண்டும் இரு தரப்பிடையே உரசல் ஏற்பட்டுள்ளது. “என்னை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிக்காவிட்டால், அது கட்சிக்கு அழிவை ஏற்படுத்தும்” என சித்து கொந்தளித்துள்ளார்.



latest tamil news



மல்வீந்தர் சிங் மாலி மற்றும் பியாரே லால் கர்க் ஆகியோரை காங்., தலைவர் சித்து தனது ஆலோசகர்களாக நியமித்திருந்தார். அதில் மாலி என்பவர் காஷ்மீரை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு தரப்பும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக பேஸ்புக்கில் பதிவிட்டார். மற்றொரு பதிவில், ”முன்பு போல் இல்லாமல், ஆப்கானிஸ்தான் நிலை உயரும் படி தலிபான்கள் ஆட்சி செய்வார்கள்.” என்றார். பியாரே என்பவர் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர், பாகிஸ்தானை விமர்சனம் செய்ததற்காக பதிலுக்கு அவரை விமர்சித்திருந்தார்.

இது கட்சியில் தனது பிடியை வலுவாக்க முயன்ற சித்துவுக்கு தர்மசங்கடத்தை உண்டாக்கியது. இதனை பயன்படுத்திக் கொண்ட முதல்வர் அமரீந்தர் சிங், சித்து ஆலோசகர்களின் கருத்து பஞ்சாப் மற்றும் நாட்டின் அமைதி, நிலைத்தன்மைக்கு ஆபத்தானவை என கடுமையாக எதிர்த்தார். இந்திய நலன்களுக்கு அதிக சேதம் ஏற்படுத்துவதற்கு முன்பு அவர்களை பதவி நீக்க வேண்டும் என சித்துவை வலியுறுத்தினார். பஞ்சாப் காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத்தும் இது தொடர்பாக சித்துவை எச்சரித்திருந்தார். இன்று (ஆக., 27) மல்வீந்தர் சிங் மாலி பதவி விலகியுள்ளார்.


latest tamil news



இது பற்றி சித்து கூறியதாவது: என்னை முடிவுகள் எடுக்க அனுமதிக்கும் படி கட்சி மேலிடத்திடம் கேட்டுள்ளேன். அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாநிலத்தில் காங்கிரஸின் வளர்ச்சியை நான் உறுதி செய்வேன். இல்லையெனில், அது கட்சிக்கு பேரழிவை ஏற்படுத்தும். என வெளிப்படையாக எச்சரிக்கும் தொனியில் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் வர உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வது எதிர்க்கட்சிகளுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஆக-202107:01:47 IST Report Abuse
பேசும் தமிழன் நாட்டிற்கு நல்லது செய்யா விட்டாலும் கூட பரவாயில்லை... அதற்க்கு தடை செய்வதென்பது தான் கான் கிராஸ் க்கு வாடிக்கை... எடுத்துகாட்டு காஷ்மீர் மற்றும் CAA ஆகட்டும்... அதற்காகவே கான் கிராஸ் இல்லாத இந்தியா வேண்டும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஆக-202100:05:53 IST Report Abuse
Vena Suna சித்து ,சித்து வேலைகளை செய்து முதல்வர் ஆக கனவு காண்கிறான். அது நடக்காது.
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
27-ஆக-202119:42:26 IST Report Abuse
BALU எப்படியோ காங்கிரஸ் நம் நாட்டைவிட்டு ஒழிந்தால் சரிதான். காங்கிரஸ் இல்லாத பாரதம், அதுவே உண்மையான வல்லரசு.ஜெய்ஹிந்த்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X