லாரியில் செம்மண் கடத்தல்: 4 பேருக்கு போலீஸ் வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரியில் செம்மண் கடத்தல்: 4 பேருக்கு போலீஸ் வலை

Added : ஆக 27, 2021
Share
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், முஸ்லிம்பூர் கூட்ரோடு பகுதியிலிருந்து செம்மண் கடத்துவதுவதாக வி.மாதேப்பள்ளி, பகுதி ஜீவா, 38 என்ற பெண் அளித்த புகார்படி, வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வருவதை கண்டதும் லாரி, பொக்லைன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் தப்பியோடினர். போலீசார் சோதனையில் டாரஸ் லாரியில் இரண்டு யூனிட் செம்மண் கடத்தி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், முஸ்லிம்பூர் கூட்ரோடு பகுதியிலிருந்து செம்மண் கடத்துவதுவதாக வி.மாதேப்பள்ளி, பகுதி ஜீவா, 38 என்ற பெண் அளித்த புகார்படி, வேப்பனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசார் வருவதை கண்டதும் லாரி, பொக்லைன் இயந்திரத்தை நிறுத்திவிட்டு அதன் டிரைவர்கள் தப்பியோடினர். போலீசார் சோதனையில் டாரஸ் லாரியில் இரண்டு யூனிட் செம்மண் கடத்தி முஸ்லிம்பூர் கூட்ரோடு வழியாக வி.மாதேப்பள்ளிக்கு கொண்டு சென்றது தெரிந்தது. லாரியையும், பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவர் கருணாகரன், 28, பொக்லைன் டிரைவர் திருப்பதி, 29, மற்றும் அதன் உரிமையாளர்கள் இருவர் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X