11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Added : ஆக 27, 2021
Share
கிருஷ்ணகிரி: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற, 11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., முரளி மற்றும் போலீசார் நேற்று காலை பாகலூர் சாலை, நல்லூர் சோதனைச்சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில், 11 டன் ரேஷன்

கிருஷ்ணகிரி: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற, 11 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, எஸ்.ஐ., முரளி மற்றும் போலீசார் நேற்று காலை பாகலூர் சாலை, நல்லூர் சோதனைச்சாவடியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், அதில், 11 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது. விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசியை வாங்கி, கர்நாடக மாநிலத்தில் அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. லாரியை ஓட்டி வந்த காஞ்சிபுரம் மாவட்டம் நெமிலி, மேல்வனபாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார், 24, அவருக்கு உதவியாக வந்த சிறுகாவேரிப்பாக்கத்தை சேர்ந்த பிரேம்குமார், 30, ஆகிய இருவரை கைது செய்தனர். ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவான லாரி உரிமையாளர் சுந்தரராமன், 34, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X