சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்உயிரிழப்பை தடுக்கும் தடுப்பூசிஉலகில் முதன்முறையாக (2020 டிசம்பர்) பிரிட்டனில் தான் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கின. இந்நிலையில் 2020 டிச., முதல் தற்போது வரை தடுப்பூசி காரணமாக ஒரு லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. அதே போல மருத்துவமனையில்

அறிவியல் ஆயிரம்

உயிரிழப்பை தடுக்கும் தடுப்பூசி


உலகில் முதன்முறையாக (2020 டிசம்பர்) பிரிட்டனில் தான் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கின. இந்நிலையில் 2020 டிச., முதல் தற்போது வரை தடுப்பூசி காரணமாக ஒரு லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. அதே போல மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 7.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.


தகவல் சுரங்கம்

ஊட்டச்சத்து நிறுவனம்


தேசிய நியூட்ரிசன் நிறுவனம் ஐதராபாத்தில் உள்ளது. 1918ல் ராபர்ட் மெக்காரிசனால் தமிழகத்தின் குன்னுாரில் சிறிய அறையில் தொடங்கப்பட்டது. 1958ல் ஐதராபாத்துக்கு மாற்றப் பட்டது. ஊட்டச்சத்தின் அவசியம், அதுகுறித்த ஆய்வுகளிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இது இந்தியாவின் பழமையான ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று. ஐ.சி.எம்.ஆர்., அமைப்பின் கீழ் செயல்படுகிறது. உடல் பருமன், நீரிழிவு நோய், உணவு வேதியியல், உணவியல், மருத்துவ நச்சுயியல், நுண் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரிவுகளில் ஆய்வில் ஈடுபடுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X