பொது செய்தி

தமிழ்நாடு

மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் சீரமைக்கப்படும்தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலூர்: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மான்ய கோரிக்கையில் பள்ளிக்கல்வியில் தொழிற்கல்விப் பாடத்திட்டத்தை சீரமைக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு வரவேற்பினை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மற்றும்
 மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் சீரமைக்கப்படும்தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்பு

வேலூர்: தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மான்ய கோரிக்கையில் பள்ளிக்கல்வியில் தொழிற்கல்விப் பாடத்திட்டத்தை சீரமைக்கப்படும் என அறிவித்துள்ளதற்கு வரவேற்பினை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது…
தொழிற்கல்வி பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் தொழிற்கல்விப் பாடங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உறுதுணையோடு மேம்படுத்தப்படும்.

இதனால் மாணவர்கள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கேற்ப திறனைப்பெற்று உடனடி வேலைவாப்பினை பெறுவர் என்றும், குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்றும், ஆசிரியர்க்களுக்கான பொது மாறுதல் கொள்கை வெளிப்படையாகநடைமுறைப்படுத்தப் படும் என்றும் இளந்தளிர் இலக்கிய திட்டம் உள்ளிட்ட 28 அறிவிப்பினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளதற்காக தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் .அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வரவேற்பினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழகத்தின் முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் அனைவருக்கும் 50 விழுக்காடு பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற வாக்குறுதிக்கு ஏற்பவும் மேலும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்டுள்ள தீர்புரையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு

தமிழக அரசு ஆணைகள் வழங்கிட கோருகின்றோம். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளி களிலும் தொழிற்கல்வி பாடத்தை கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X