பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு, வயது வரம்பு தளர்வு தொடர்பான மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். இங்கு, முடக்கு வாதம் தொடர்பாக, 13 மாற்றுத்திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு தொடர்பாக, 14 மாற்றுத்திறனாளிகளும், பெருமூளை வாதம் என ஒரு மாற்றுத்திறனாளியும், பார்வை குறைபாடு என ஆறு

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு, வயது வரம்பு தளர்வு தொடர்பான மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்தார். இங்கு, முடக்கு வாதம் தொடர்பாக, 13 மாற்றுத்திறனாளிகளும், செவித்திறன் குறைபாடு தொடர்பாக, 14 மாற்றுத்திறனாளிகளும், பெருமூளை வாதம் என ஒரு மாற்றுத்திறனாளியும், பார்வை குறைபாடு என ஆறு மாற்றுத்திறனாளிகளும், நாள்பட்ட நரம்பியல் கோளாறு உடைய ஒருவரும் என மொத்தம், 35 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் மருத்துவ குழுவினர் பார்வையிட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சைபுதீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X