சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருட்டால் நடந்த விபரீதம் ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஆம்பூர்:ஆம்பூர் அருகே, ஏரியில் குளித்த சிறுவன் பாலாற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்தார்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தில் பாலாற்றையொட்டி உள்ள பெரிய ஏரி நிரம்பி இன்று காலை கோடி போனது.இதனால் கண்ணடிகுப்பத்தை
 மணல் திருட்டால் நடந்த விபரீதம் ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பலி

ஆம்பூர்:ஆம்பூர் அருகே, ஏரியில் குளித்த சிறுவன் பாலாற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்தார்.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, ஆம்பூர் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆம்பூர் அருகே விண்ணமங்கலத்தில் பாலாற்றையொட்டி உள்ள பெரிய ஏரி நிரம்பி இன்று காலை கோடி போனது.இதனால் கண்ணடிகுப்பத்தை சேர்ந்த விஜயகுமார், 50, என்ற விவசாயியின் ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகன் சரண் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 9 சிறுவர்கள் மதியம் 2:00 மணிக்கு பெரிய ஏரிக்கு சென்று விளையாடி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 10 சிறுவர்களும் செல்பி எடுத்த போது தவறி நீரில் விழுந்து பாலாற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டனர். அதில் சரண் நீரில் மூழ்கி இறந்தார்.

மற்ற சிறுவர்கள் பாலாற்றில் நீந்தி உயிர் தப்பினர். ஆம்பூர் தீயணைக்கும் துறையினர் இரண்டு மணி நேரம் போராடி சரனின் உடலை கைப்பற்றினர். ஆம்பூர் போலீசார் கூறியதாவது: தொடர் மழையால் மரப்பட்டு, செங்கிலிகுப்பம், மின்னுார், ஆலாங்குப்பம், சோலுார், சான்றோர்குப்பம் பகுதி பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால் பாலாற்றையொட்டியுள்ள விண்ணமங்கலம் பெரிய ஏரி நிரம்பி கோடி போனது. இதில் குளித்த சிறுவர்கள் பாலாற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டனர்.

ஏற்கனவே அந்த பகுதி பாலாற்றில் 50 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மணல் திருட்டு நடந்து வருகிறது. இதனால் அந்த பள்ளத்தில் சிக்கி சிறுவன் இறந்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X