சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி: ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி: ஆக., 31க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 27, 2021
Share
கரூர்: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு, 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு மதிப்பூதியத்தில், 2,000 ரூபாய்

கரூர்: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு, 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கு மதிப்பூதியத்தில், 2,000 ரூபாய் வழங்கப்படும். இதில் விண்ணப்பிக்க, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில், 35 வயதுக்கு கீழ் இருத்தல் வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் தொடர்புதிறன் உடையவர்களாக இருத்தல் வேண்டும். கணினிதிறன் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். எனவே, சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சார்ந்துள்ள பஞ்., அளவிலான கூட்டமைப்பு மூலமாக வரும், 31க்குள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்-212ல் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X