பொது செய்தி

இந்தியா

90 சதவீதம் மக்களுக்கு தடுப்பூசி போட்டால் கோவிட் முடிவடையும்: தொற்று நோயியல் நிபுணர்கள்

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டெல்டா வகை வைரஸால் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மக்கள்தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தினர் இயல்பாக எதிர்ப்பு சக்தி அடைவதற்கான சாத்தியம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறுகின்ற நிபுணர்கள், 90% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் கோவிட் தொற்று முடிவடையும் என்கின்றனர். 2019-ல் உருவான கோவிட் வைரஸின் ஆல்பா வகையை விட தற்போது உலகளவில் பரவி வரும் டெல்டா வகை 60% அதிகம்

டெல்டா வகை வைரஸால் ஹெர்ட் இம்யூனிட்டி எனப்படும் மக்கள்தொகையின் குறிப்பிட்ட சதவீதத்தினர் இயல்பாக எதிர்ப்பு சக்தி அடைவதற்கான சாத்தியம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறுகின்ற நிபுணர்கள், 90% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் கோவிட் தொற்று முடிவடையும் என்கின்றனர்.



latest tamil news


2019-ல் உருவான கோவிட் வைரஸின் ஆல்பா வகையை விட தற்போது உலகளவில் பரவி வரும் டெல்டா வகை 60% அதிகம் பரவக்கூடியதாக உள்ளது. 2 மடங்கு அதிகம் தொற்று பாதிப்பை உண்டாக்குகிறது. தடுப்பூசிக்கும் இவ்வகை வைரஸ்கள் முழுமையாக கட்டுப்படுவதில்லை. அமெரிக்க அரசின் தகவல் படி, டெல்டா வகை வைரஸிடமிருந்து பாதுகாப்பதில் பைசர் மற்றும் மார்டனா தடுப்பூசிகளின் திறன் 91 சதவீதத்திலிருந்து 66 சதவீதமாக குறைந்துள்ளன. மேலும் சில ஆய்வுகள், தடுப்பூசிகளின் செயல்திறன் காலப்போக்கில் டெல்டா வகைக்கு எதிராக வீழ்ச்சியடைவதை காட்டுகின்றன.



ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன?



ஹெர்ட் இம்யூனிட்டியை மக்கள் தொகை எதிர்ப்பு திறன் என்கின்றனர். வைரஸ் பாதிப்பதாலோ அல்லது வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி போடுவதாலோ உடலில் நோய் எதிர்ப்பாற்றல் உண்டாகும். அவர்கள் நோய்க்கிருமியைப் பெறாமலும், பரவாமலும் தடுக்கிறார்கள். இதன் மூலம் நோய் பரவும் சங்கிலி உடைப்பட்டு ஒரு கட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களும் வைரஸிடமிருந்து பாதுகாப்பை பெறுவார்கள். இதனை தான் ஹெர்ட் இம்யூனிட்டி அல்லது மக்கள்தொகை எதிர்ப்பாற்றல் என்கின்றது உலக சுகாதார நிறுவனம். தற்போதைய டெல்டா வகையால் இந்த பாதுகாப்பை மக்கள் பெறுவது சந்தேகம் என்கின்றனர் நிபுணர்கள்.



90% மக்களுக்கு தடுப்பூசி தேவை!



இது பற்றி ஆண்டனி ப்ளாஹால்ட் என்ற தொற்றுநோயியல் நிபுணர் ஏ.எப்.பி., செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “மக்களை வைரஸ் பாதிக்கும் போது மக்கள்தொகை எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கோவிட் அசல் வைரஸை பொறுத்தவரை, அதன் இனப்பெருக்க விகிதம் பூஜ்ஜியம் முதல் 3 ஆக இருந்தது. அதாவது தொற்று பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும், மற்ற மூவருக்கு அதை கடத்துவர். அந்நிலையில் 66% மக்களுக்கு தடுப்பூசி போட்டால் மக்கள்தொகை நோய் எதிர்ப்புசக்தியை அடைய முடியும். ஆனால் டெல்டா வகையில் இனப்பெருக்க விகிதம் 8 ஆக உள்ளது. அதனால் 90 சதவீதம்மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்.” என கூறியுள்ளார்.


latest tamil news




தொற்றுநோய் முடிவடையும்!



மக்கள்தொகை நோய் எதிர்ப்பாற்றல் தற்போதைய சூழலில் முக்கிய பங்கு வகிக்கவில்லை. எனவே தடுப்பூசி மூலம் எவ்வளவு பேரை பாதுகாக்க முடியுமோ அவ்வளவு பேரை பாதுகாக்க வேண்டும் என்கின்றனர். இறுதியில், நிச்சயமாக, அனைத்து தொற்றுநோய்களும் முடிவடையும் என நம்பிக்கை அளிக்கின்றனர். தடுப்பூசி போட்டிருந்தாலும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் படி பரிந்துரைக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muguntharajan - Coimbatore,இந்தியா
28-ஆக-202106:54:23 IST Report Abuse
Muguntharajan இது தவறு என நினைக்கிறேன். ஏனெனில் அமெரிக்காவில் 90% மக்கள் தடுப்பூசி போட்ட பிறகும் தற்போது தொற்று அதிகமாகிறதே?
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-ஆக-202120:43:22 IST Report Abuse
Ramesh Sargam அப்படி கோவிட் முடிவடைந்தாலும், மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். கோவிட் போய் விட்டது, என்று சும்மா வேலை வெட்டியில்லாமல், வெளியில் சுற்றுவதை நிறுத்தவேண்டும். அவசியம் இருந்தால் மட்டும் வெளியில் செல்ல வேண்டும். அப்படி கோவிட் போய் விட்டது என்று நாம் நிம்மதியா இருந்தால், அந்த சீனாக்காரனுக்கு பொறுக்காது. மீண்டும் ஒரு வைரஸை கண்டுபிடித்து அதை பரப்பி நம் சந்தோஷத்தை கெடுப்பான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X