சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
முதல்வர் ஸ்டாலின்: டில்லி பல்கலையின் ஆங்கில பாடத்திட்டத்தில், தமிழ் எழுத்தாளர் பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணியின் மொழியாக்கப் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை பல்கலை நிர்வாகம் நீக்கியிருப்பது, ஒருதலைப் பட்சமான முடிவு. கட்சி அரசியல், மதவாத கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட்டு, நீக்கப்பட்டவற்றை டில்லி பல்கலை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க
'டவுட்' தனபாலு

முதல்வர் ஸ்டாலின்: டில்லி பல்கலையின் ஆங்கில பாடத்திட்டத்தில், தமிழ் எழுத்தாளர் பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணியின் மொழியாக்கப் படைப்புகள் இடம் பெற்றிருந்தன. அவற்றை பல்கலை நிர்வாகம் நீக்கியிருப்பது, ஒருதலைப் பட்சமான முடிவு. கட்சி அரசியல், மதவாத கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட்டு, நீக்கப்பட்டவற்றை டில்லி பல்கலை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: டில்லி பல்கலைக்கழகம் மதவாத கண்ணாடி அணிந்து பார்க்கிறதா அல்லது உங்களுக்கு அறிக்கை எழுதி கொடுத்த செயலர்கள், அதுபோன்ற கண்ணாடியை அணிந்துள்ளனரா என்ற, 'டவுட்' வருகிறது. ஏனெனில், இதுபோன்ற செயல்கள் தன்னிச்சையாக, அவ்வப்போது பல்கலைகளில் நடப்பது தான். இதற்கு போய், நீங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதா?

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசு, கர்நாடகாவுக்கு சாதகமாக செயல்படக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்ட விவாதப் பொருளில், மேகதாது அணை விவகாரத்தை மத்திய அரசு சேர்க்கக் கூடாது. அதுமட்டுமின்றி, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் தயாரிக்கப்பட்ட திட்ட அறிக்கையை கர்நாடகாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

'டவுட்' தனபாலு: மத்திய நீர் வளத்துறை அமைச்சரை, தமிழக தலைவர்கள் சந்திக்கும் போது, 'தமிழகத்தின் அனுமதியின்றி எதையும் செய்ய மாட்டோம்' என்கிறார், மத்திய நீர் வளத்துறை அமைச்சர். கர்நாடகாவிலிருந்து முதல்வர் வந்து சந்திக்கும் போது, 'கர்நாடகாவுக்கு பாதகமாக எதையும் செய்ய மாட்டோம்' என்கிறார். மேகதாது அணை விவகாரத்தில், மத்திய அரசு விளையாடுகிறதோ என்ற, 'டவுட்' மக்களுக்கு வருகிறது!

தமிழக நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், நம் மாநிலத்தில், பண்டிகை நாட்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த, 10 நாட்கள் மிகவும் கூர்ந்து கண்காணித்து செயல்பட வேண்டும்.

'டவுட்' தனபாலு: அடுத்த பத்து நாட்களில் வரவிருக்கும் முக்கியமான ஹிந்து பண்டிகைகள், கோவில் விழாக்களை, ஹிந்துக்களிடம் ஆலோசனை கேட்காமல், அரசே ஒரு தலைப்பட்சமாக முடிவெடுத்து மூடிவிடும். ஆனால், சிறுபான்மையின வழிபாட்டு தலங்கள் விவகாரத்தில் பக்குவமாக நடந்து கொள்ளும். இது தான், இவர்களின் மதச்சார்பற்ற தன்மையோ என்ற, 'டவுட்' இப்போது அடிக்கடி வருகிறது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-ஆக-202115:53:06 IST Report Abuse
D.Ambujavalli கூட்டம் சேர்த்து நோயைப் பரப்பக்கூடாது என்பது மக்கள் பாதுகாப்பு அக்கறை தானே அந்த அளவில் ஏற்றுக்கொள்வோம்
Rate this:
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
28-ஆக-202104:05:11 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan நன்றி திருத்தம் செய்யப்பட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X