மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 27, 2021
Share
சென்னை:உதவித்தொகையை உயர்த்தக் கோரி, அரசின் கவனத்தை ஈர்க்க, மாநிலம் முழுதும், ஆர்.டி.ஓ., அலுவலங்கள் உள்ளிட்ட, 500 இடங்களில், மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தெலுங்கானா, புதுச்சேரியில் வழங்கப்படுவது போல, தமிழகத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை, 3,000 ரூபாயாக வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள்
 மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னை:உதவித்தொகையை உயர்த்தக் கோரி, அரசின் கவனத்தை ஈர்க்க, மாநிலம் முழுதும், ஆர்.டி.ஓ., அலுவலங்கள் உள்ளிட்ட, 500 இடங்களில், மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தெலுங்கானா, புதுச்சேரியில் வழங்கப்படுவது போல, தமிழகத்திலும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை, 3,000 ரூபாயாக வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்; போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தும், பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு இல்லாததால், மாற்றுத் திறனாளிகள் ஏமாற்றம் அடைந்தனர்.மாற்றுத் திறனாளிகள் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போதாவது, உதவித் தொகையை, அரசு உயர்த்தி வழங்க வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுதும், மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தினர், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட, 500 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X