அரசியல் செய்தி

தமிழ்நாடு

கஜானா காலி: முதல்வர்

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து, காங்., சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, அரசு கஜானா குறித்து பேசினார். அவர் பயன்படுத்திய வார்த்தையை நீக்கும்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:முதல்வர் ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை பேசிய வார்த்தையை நீக்கிவிட்டு, கஜானாவை காலியாக்கி இருக்கின்றனர் என, திருத்தம்

முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்து, காங்., சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை பேசும்போது, அரசு கஜானா குறித்து பேசினார். அவர் பயன்படுத்திய வார்த்தையை நீக்கும்படி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தினர்.

அதைத் தொடர்ந்து நடந்த விவாதம்:

முதல்வர் ஸ்டாலின்:

செல்வப்பெருந்தகை பேசிய வார்த்தையை நீக்கிவிட்டு, கஜானாவை காலியாக்கி இருக்கின்றனர் என, திருத்தம் செய்து கொள்ளுங்கள்.

சபாநாயகர் அப்பாவு:

முதல்வர் கூறியபடி திருத்தம் செய்யப்படுகிறது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம்:

'கஜானா காலியாக இருக்கிறது' என, முதல்வர் கூறி உள்ளார். சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். மாநில அரசின் சொந்த நிதி வருவாய், மத்திய அரசு பங்கு, பற்றாக்குறை எவ்வளவு என கூறிவிட்டு, கஜானா காலியாக இருக்கிறது என, முதல்வரே கூறலாமா?

சபாநாயகர்:

இது, பயன்படுத்தக் கூடாத வார்த்தை இல்லை.

அமைச்சர் துரைமுருகன்:

இப்படி சொன்னதாலேயே காலியாக இருக்கிறதா, இல்லையா என்பதில்லை. வெள்ளை அறிக்கை வைத்து வெளிப்படுத்தி விட்டோம்.

பன்னீர்செல்வம்:

முதல்வர் இப்படி கூறலாமா என்பது தான் என்னுடைய கேள்வி.

துரைமுருகன்:

நிதி நிலைமை உண்மையிலேயே காலியாக இருந்தது. முதல்வர் நிதி இருக்கிறது என்று கூறினால், சபை மீறலாகி விடும். எனவே உண்மையை கூறியுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X