முடிவெடுக்க அனுமதிக்காவிட்டால் நடப்பதே வேறு: சித்து மிரட்டல்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (8+ 5)
Share
Advertisement
அமிர்தசரஸ் ;''காங்., கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் என்ற முறையில் சுதந்திரமாக முடிவெடுக்க என்னை அனுமதிக்காவிட்டால் நடப்பதே வேறு,'' என, நவ்ஜோத் சிங் சித்து கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.இம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் இரு ஆலோசகர்கள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்து
முடிவு, அனுமதி, சித்து மிரட்டல்

அமிர்தசரஸ் ;''காங்., கட்சியின் பஞ்சாப் மாநில தலைவர் என்ற முறையில் சுதந்திரமாக முடிவெடுக்க என்னை அனுமதிக்காவிட்டால் நடப்பதே வேறு,'' என, நவ்ஜோத் சிங் சித்து
கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது.

இம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் இரு ஆலோசகர்கள் காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டனர்.இதை கண்டித்த பஞ்சாப் காங்., மேலிட பொறுப்பாளரான ஹரிஷ் ராவத், 'கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட இரு ஆலோசகர்களையும் நவ்ஜோத் சிங் நீக்க வேண்டும்' என, வலியுறுத்தினார்.


மோதல்



இந்நிலையில் பஞ்சாபில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் நவ்ஜோத் சிங் பேசியதாவது:என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என கட்சி தலைமையிடம் தெரிவித்து உள்ளேன்.அவ்வாறு செய்தால் அடுத்த 20 ஆண்டுகள் பஞ்சாபில் காங்., செழித்து வளரும். முடிவெடுக்கும் சுதந்திரம் எனக்கு வழங்கப்படா விட்டால் நடப்பதே வேறு. ஒருவரையும் சும்மா விட மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு ஹரிஷ் ராவத் பதில் அளிக்க மறுத்து விட்டார். ''கட்சியால் நியமிக்கப்படாத ஆலோசகர்களை, நவ்ஜோத் சிங் நீக்கா விட்டால் நான் நீக்குவேன்,'' என, ஹரிஷ் ராவத் எச்சரித்துள்ளார். இதனால் நவ்ஜோத் சிங் - ஹரிஷ் ராவத் இடையிலான மோதல் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது.


ஆலோசகர் விலகல்



காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மல்விந்தர் சிங் மாலி, நவ்ஜோத் சிங்கின் ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.''நான் எந்த பொறுப்பையும் ஏற்கவில்லை என்பதால் இதை ராஜினாமா என, கூற முடியாது,'' என, மல்விந்தர் சிங் மாலி தெரிவித்துள்ளார்.முன்னாள் ஆசிரியரான மல்விந்தர் சிங், ''காஷ்மீர் இந்தியாவைச் சேர்ந்தது அல்ல; அது தனி நாடு,'' என, கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.


ஹரிஷ் ராவத் ஓட்டம்!



உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.இதில், மாநில காங்., தேர்தல் பிரசாரக் குழு தலைவர் என்ற முறையில் களப்பணியாற்ற ஹரிஷ் ராவத் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி தற்போது வகித்து வரும் பஞ்சாப் காங்., மேலிட பொறுப்பாளர் பதவியை துறக்க அவர் முடிவு செய்துள்ளார்.

''எனினும், காங்., தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கு கட்டுப்படுவேன்,'' என, ஹரிஷ் ராவத், தெரிவித்துள்ளார். ஆனாலும், பஞ்சாப் மாநில காங்., தலைவர் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே ஹரிஷ் ராவத் இந்த முடிவை எடுதுள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (8+ 5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-ஆக-202112:43:15 IST Report Abuse
sankaseshan இவன் தற்போதைய பிண்டறன் வாலே இத்தாலிய காங்கிரசுக்கு சமாதி கட்டாமல் போக மாட்டான் Kangiras mukt Bharat
Rate this:
Cancel
28-ஆக-202112:03:18 IST Report Abuse
kulandai kannan ஓணான் வேலையைக் காட்டுகிறது.
Rate this:
Cancel
ramesh - chennai,இந்தியா
28-ஆக-202110:22:29 IST Report Abuse
ramesh சித்து முதலில் பிஜேபி இல் இருந்து சண்டை போட்டு காங்கிரசுக்கு ஓடி வந்தவன் .தற்போது அதே வேலையே காங்கிரஸில் செய்கிறான் .இங்கிருந்து விரட்டி விட்டால் திரும்பவும் பிஜேபி யை கெடுக்க அங்கே பொய் ஒட்டி கொள்வான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X