கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு செப்., 2க்கு ஒத்திவைப்பு: சயான் விசாரணை அறிக்கை தாக்கல் இல்லை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஊட்டி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி, காவலாளி ஓம் பகதுார் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.இவ்வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.
 கோடநாடு வழக்கு செப்., 2க்கு ஒத்திவைப்பு: சயான் விசாரணை அறிக்கை தாக்கல் இல்லை

ஊட்டி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை, செப்., 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ம் தேதி, காவலாளி ஓம் பகதுார் கொள்ளையரால் கொலை செய்யப்பட்டார். ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.இவ்வழக்கு விசாரணை, ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. விசாரணை தொடங்கியதும், 'புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் தேவை' என, அரசு வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், 35வது சாட்சியான அனுபம் ரவி சார்பில் ஆஜரான வக்கீல் அனந்த கிருஷ்ணன், ''மறு விசாரணை செய்யக்கூடாது என தடை கோரி, சென்னை ஐகோர்ட்டில் அனுபம் ரவி மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை விசாரணை நடத்தக் கூடாது,'' என்றார். கோர்ட் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட சயான் ஆஜரானார். வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. ஜாமினில் உள்ள, 8 பேரும் ஆஜராகவில்லை.

வழக்கை நீதிபதி சஞ்சய்பாபா செப்., 2க்கு ஒத்தி வைத்தார்.இந்த வழக்கில் சயானிடமும், இறந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் போலீசார், சமீபத்தில் விசாரணை மேற்கொண்டனர்.அரசு வக்கீல் ஷாஜகான் நிருபர்களிடம் கூறுகையில்,''விசாரணை முடித்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு கால அவகாசம் தேவை என தெரிவித்தோம். சாட்சிகளான கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் உள்ளிட்ட மூவரிடமும் விசாரணை நடக்கும்,'' என்றார்.


நீதிபதி அறிவுரை!

ஊட்டி செசன்ஸ் கோர்டில், கோடநாடு வழக்கு விசாரணை தொடங்கியதும், அரசு வக்கீல் கனகராஜ், 35வது சாட்சி அனுபம் ரவி தரப்பில் ஆஜரான அனந்தகிருஷ்ணன் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது.நீதிபதி சஞ்சய் பாபா குறுக்கிட்டு, 'ஒரு வழக்கை அமைதியான முறையில் நடத்த நீதிமன்றம், அரசு தரப்பு, பொதுமக்கள், சமுதாயம் அனைவரும் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். அனைவரும் அமைதியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என, அறிவுரை வழங்கினார்.தொடர்ந்து விசாரணை அமைதியான முறையில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X