கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பன்னீர், பழனிசாமி மீது அவதுாறு வழக்கு: பதில் அளிக்க புகழேந்திக்கு நோட்டீஸ்!

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:அவதுாறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தொடர்ந்த வழக்கில், பதில் அளிக்குமாறு, புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, ஜூன், 14ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,

சென்னை:அவதுாறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தொடர்ந்த வழக்கில், பதில் அளிக்குமாறு, புகழேந்திக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி, ஜூன், 14ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இருவரும் அறிவிப்பு வெளியிட்டனர்.

அவர்கள் விடுத்த அறிக்கை, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதால், பன்னீர்செல்வம், பழனிசாமியை, அவதுாறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி, சென்னையில், எம்.பி., -- எம் எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், புகழேந்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், இருவரையும் செப்., 14ல் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித் தனியே மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ''கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டதால், புகழேந்தி நீக்கப் பட்டார். கட்சிகாரர்களுக்கான அறிக்கை என்பதால் அவதுாறு ஆகாது. வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; வழக்கை ரத்து செய்ய வேண்டும்,'' என்று, வாதாடினார்.

பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, ''புகாரில் அவதுாறுக்கான எந்த சாராம்சமும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினர், அதன் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும். புகழேந்தி, 2017ல் வெளியேற்றப்பட்ட போதும், இதே வார்த்தைகளை பயன்படுத்தி தான் வெளியேற்றப்பட்டார்.''எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால், இதே போன்ற வார்த்தையை தான் பயன்படுத்தும்; ஆனால், அதற்காக ஒரு அவதுாறு வழக்கு தொடரப்படுவது, இதுவே முதல்முறை,'' என்றார்.

புகழேந்தி தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத் ஆஜராகி, ''பதில் மனு தாக்கல் செய்வதாகவும், தடை விதிக்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றும் கூறினார்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக பதில் அளிக்க, புகழேந்திக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்., 13க்கு தள்ளி வைத்தார். சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பது குறித்து, அன்றைய தினம் முடிவெடுக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X