கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நளினிக்கு மருத்துவ பரிசோதனை

Added : ஆக 27, 2021
Share
Advertisement
வேலுார்:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதால், மருத்துவ சிகிச்சை அளிக்க ஒரு மாதம் பரோல் கேட்டு கடந்த மாதம், 23ல் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார்.இதையடுத்து நேற்று காலை, 10:00 மணிக்கு நளினியை வேலுார் அரசு பெண்லேன்ட் மருத்துவனைக்கு
 நளினிக்கு மருத்துவ பரிசோதனை

வேலுார்:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தனக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதால், மருத்துவ சிகிச்சை அளிக்க ஒரு மாதம் பரோல் கேட்டு கடந்த மாதம், 23ல் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார்.இதையடுத்து நேற்று காலை, 10:00 மணிக்கு நளினியை வேலுார் அரசு பெண்லேன்ட் மருத்துவனைக்கு பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றனர். அவருக்கு ரத்த அழுத்தம், இ.சி.ஜி., கர்ப்பப்பை, சிறுநீரகம், எலும்பு தேய்மானம், எக்கோ என, 20க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின் அவர் மீண்டும் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நளினி ஒரு மாதம் பரோல் கேட்டுள்ளார். இதற்காகத்தான் அவருக்கு, 25 வகையான முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X