சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஜோலார்பேட்டை:பேரறிவாளனுக்கு நான்காவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு சிறுநீரக தொற்று பிரச்னைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மாதம் பரோல் வழக்கும்படி அவரது தாய் அற்புதம்மாள், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார்.இதை ஏற்று,

ஜோலார்பேட்டை:பேரறிவாளனுக்கு நான்காவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். இவருக்கு சிறுநீரக தொற்று பிரச்னைக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஒரு மாதம் பரோல் வழக்கும்படி அவரது தாய் அற்புதம்மாள், முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார்.இதை ஏற்று, மே 28ம் தேதி பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

அவர், போலீஸ் பாதுகாப்புடன், திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் சிகிச்சை பெற வசதியாக மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்கும்படி தாய் அற்புதம்மாள், முதல்வருக்கு மனு அனுப்பியிருந்தார். இதை ஏற்று, நான்காவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி அரசு உத்தரவிட்டது. இதற்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X