சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

ஆரோக்கியம் வழங்கும் உளுந்தங்கஞ்சி!

Added : ஆக 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உளுந்தங்கஞ்சி மற்றும் பருத்திப் பால் தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், பிரபல சமையல் கலைஞர் திவாகர்: உளுந்தங்கஞ்சி என்பது நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. ஊட்டச்சத்து மிகுந்த உணவு இது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு. எந்த சீதோஷ்ணத்திலும் எளிதாக தயாரித்து, சுகமாக அருந்தக் கூடிய கஞ்சி உணவு இது. வாரத்தில் ஒரு முறையாவது இந்த கஞ்சி
சொல்கிறார்கள்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உளுந்தங்கஞ்சி மற்றும் பருத்திப் பால் தயாரிப்பது எப்படி என விளக்குகிறார், பிரபல சமையல் கலைஞர் திவாகர்: உளுந்தங்கஞ்சி என்பது நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று. ஊட்டச்சத்து மிகுந்த உணவு இது. பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு. எந்த சீதோஷ்ணத்திலும் எளிதாக தயாரித்து, சுகமாக அருந்தக் கூடிய கஞ்சி உணவு இது.

வாரத்தில் ஒரு முறையாவது இந்த கஞ்சி உணவை அருந்தி வர, உடல் ஆரோக்கியம் மேம்படும். உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி என பார்ப்போம்.தோல் நீக்கிய உளுந்து - 100 கிராம், வெல்லம் - 150 கிராம், துருவிய தேங்காய் அல்லது தேங்காய் பால் - தேவைக்கு ஏற்ப, சுக்கு - 4 கிராம், ஏலக்காய் - 2, நல்லெண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.உளுந்தை நான்கு மணி நேரம் ஊற வைத்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் அரைத்த உளுந்து மாவை சேர்த்து மரக்கரண்டியால் கிளற வேண்டும்.சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை வேக விட வேண்டும். உளுந்தின் பச்சை வாசனை போன பின், சிறிது நேரம் கொதி விட்ட பின், வெல்ல கரைசலை சேர்க்க வேண்டும். அப்போது தேங்காய் துருவல், சுக்கு, ஏலம் போன்றவற்றை பவுடர் செய்து வைத்திருப்பதை சேர்த்து, சூடாக பரிமாற வேண்டும். உளுந்தங்கஞ்சிக்கு பனை வெல்லம் பயன்படுத்துவது சிறப்பானது. பனை வெல்லம் பயன்படுத்துவதால் ஜலதோஷம், இருமல் போன்றவை குணமாகும்.பருத்திப்பாலும் உடல் நலனுக்கு ஆரோக்கியம் தரும் பானம்.

இதில் பருத்திக் கொட்டையை நனைய வைத்து, அரைத்து, பிழிந்து எடுக்கப்படும் சாறு சேர்க்கப்படுகிறது. இது பலருக்கு பிடிக்கும்; சிலருக்கு பிடிக்காது. எனவே, முதலிலேயே பருத்திப் பாலில் எந்த அளவுக்கு பருத்திக் கொட்டை சேர்க்கப்பட்டுள்ளது என்பதை கேட்டு அறிவது நல்லது.இதுவும் பாரம்பரிய உணவு தான். மதுரை, திருநெல்வேலி போன்ற சில இடங்களில் மட்டும் தான் பரவலாக விற்கப்படுகிறது.

கோடைக் காலத்தில் இதை அருந்தினால் உடலில் குளிர்ச்சி ஏற்படும். குளிர் காலத்திலும் இதன் சூட்டுக்காக பலரும் ஆர்வமாக அருந்துவர். உளுந்தங்கஞ்சிக்கு தேவைப்படும் உளுந்தின் அளவை சற்று குறைத்து, அதற்குப் பதில் பருத்தி கொட்டையை ஊற வைத்து சாறு எடுத்து, பனை வெல்லம், சுக்கு போன்றவற்றை சேர்த்து பருத்திப்பாலாக, சூடாக பருகலாம். உடல் நலனுக்கு மிகுந்த நன்மை சேர்க்கும் இது, பல விதமான பக்குவங்களில் விதவிதமாக தயாரிக்கப்படுகிறது!

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arul. K - Hougang,சிங்கப்பூர்
28-ஆக-202118:39:48 IST Report Abuse
Arul. K நெய் மற்றும் நல்லெண்ணையை என்ன செய்வது ?
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
28-ஆக-202117:23:44 IST Report Abuse
Nesan பெண்கள் பூப்பு எய்தும் காலங்களில், கிராமத்தில் இன்றும் உளுந்தங்கழி கொடுப்பது வழக்கமாக உள்ளது. அத்துடன் தொட்டு சாப்பிடுவதற்கு கருப்பட்டியும், செக்குலே ஆட்டிய நல்லஎண்ணையும் கொடுப்பார்கள். அவ்வளவு சத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X