கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மனசாட்சிக்கு எதிராக தீர்ப்பளிக்கவில்லை பிரிவு உபசார நிகழ்ச்சியில் நீதிபதி பேச்சு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:''ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு உத்தரவும் வழங்கியதில்லை,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பு, நேற்று முன்தினம்
 மனசாட்சிக்கு எதிராக தீர்ப்பளிக்கவில்லை பிரிவு உபசார நிகழ்ச்சியில் நீதிபதி பேச்சு

சென்னை:''ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு உத்தரவும் வழங்கியதில்லை,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எம்.சுந்தரேஷ் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பு, நேற்று முன்தினம் வெளியானது. நீதிபதி சுந்தரேஷுக்கு, உயர் நீதிமன்றத்தில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடந்தது.

அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் பாராட்டி பேசுகையில், ''வழக்கறிஞராக, 24 ஆண்டுகள்; நீதிபதியாக, 12 ஆண்டுகள் பணியாற்றிய நீதிபதி சுந்தரேஷ், 1.03 லட்சம் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார்,'' என்றார்.

பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:பள்ளி படிப்பை முடித்து, மேல்படிப்புக்கு செல்லும் மாணவனை போல உணர்கிறேன். பிரிவு என்பது சிக்கலானது தான்; இருந்தாலும், வாழ்க்கை முன்னோக்கி செல்ல வேண்டும்.அனைவரையும் கண்ணியத்துடன் நடத்த வேண்டும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், மனசாட்சிக்கு எதிராக ஒரு உத்தரவும் வழங்கியதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை உயர் நீதிமன்றம் சார்பில், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி சுந்தரேஷுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மூத்த நீதிபதிகள் சிவஞானம், ராஜா, பி.என்.பிரகாஷ் உட்பட நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருபாகரன் ஓய்வு பெற்றது; நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை, 56 ஆக குறைந்துள்ளது. உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை, 75.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X