சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உதவி கமிஷனர், இன்ஸ்.,சுக்கு வலை தனிப்படை அமைத்தது சி.பி.சி.ஐ.டி.,

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:தொழில் அதிபரின் குடும்பத்தாரை பண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து, சொத்தை அபகரித்த வழக்கில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., உள்ளிட்டோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்; தொழில் அதிபர். இவருக்கும், தேனாம்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு தொழில் அதிபர் வெங்கடேஷுக்கும் இடையே தொழில்

சென்னை:தொழில் அதிபரின் குடும்பத்தாரை பண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து, சொத்தை அபகரித்த வழக்கில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., உள்ளிட்டோரை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்; தொழில் அதிபர். இவருக்கும், தேனாம்பேட்டையைச் சேர்ந்த மற்றொரு தொழில் அதிபர் வெங்கடேஷுக்கும் இடையே தொழில் ஒப்பந்தம் இருந்துள்ளது. இதில் 7.50 கோடி ரூபாய், ராஜேஷ் தர வேண்டியிருப்பதாக தெரிகிறது.கணினி விற்பனை மற்றும் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வரும் ராஜேஷ், ஒப்பந்த அடிப்படையில் பணிகள் எடுத்து செய்ததற்காக, 5.50 கோடி ரூபாயை சம்பளமாக அதில் கணக்கு காட்டி விட்டார்.

மீதமுள்ள 2 கோடி ரூபாயை கடனாக கருதி, தான் நடத்தி வந்த, 'செக்யூரிட்டி' நிறுவனத்தை, வெங்கடேஷிடம் ராஜேஷ் விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. எனினும், இவர் மீது 2019ல், சென்னை திருமங்கலம் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளிக்கப்பட்டது.இந்த பண பிரச்னை தொடர்பாக, அப்போது திருமங்கலம் உதவி கமிஷனராக இருந்த சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., பாண்டியராஜன் உள்ளிட்டோர், ராஜேஷ் மற்றும் அவரின் குடும்பத்தாரை, பண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை செய்து, சொத்தை அபகரித்துள்ளனர்.

இதன் பின்னணியில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழில் அதிபர்கள் சீனிவாச ராவ், தருண், கிருஷ்ண பிரசாத் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடைத் தரகராக, கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் என்பவர் இருந்துள்ளார். இது குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து, சிவகுமார், சரவணன் உள்ளிட்ட 10 பேர் மீது கடத்தல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன், சென்னை முகலிவாக்கம் பகுதியில் உள்ள சிவகுமார் வீட்டின் பூட்டை உடைத்து, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தலைமறைவாக உள்ள, உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., உள்ளிட்டோரை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வழக்கில் சிக்கியவர்கள், தெலுங்கானாமாநிலம் ஐதராபாதில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X