அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேவையற்ற விமர்சனம்!

Added : ஆக 27, 2021
Share
Advertisement
தேவையற்ற விமர்சனம்!கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிலர் விமர்சிக்கின்றனர்; அந்த தேவையற்ற விமர்சனங்களை ஏற்க மாட்டோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தவறானவை என்றால், வேறு எந்த மாநிலம் சரியான நடவடிக்கைகளை எடுக்கிறது?பினராயி விஜயன்கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்மிகப்பெரிய சக்தி!நம் நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்க
 தேவையற்ற விமர்சனம்!

தேவையற்ற விமர்சனம்!

கேரளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை சிலர் விமர்சிக்கின்றனர்; அந்த தேவையற்ற விமர்சனங்களை ஏற்க மாட்டோம். நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் தவறானவை என்றால், வேறு எந்த மாநிலம் சரியான நடவடிக்கைகளை எடுக்கிறது?

பினராயி விஜயன்

கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்

மிகப்பெரிய சக்தி!

நம் நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது மிகவும் அவசியம். தொழில்நுட்பத் துறையில் நாம் முன்னேற்றம் அடைந்தால், உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ராஜ்நாத் சிங்

ராணுவ அமைச்சர், பா.ஜ.,

சாதித்தது என்ன?

மத்திய அமைச்சராக உள்ள என்னை கைது செய்து, மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே சாதித்தது என்ன? சிவசேனா கட்சி குறித்தும், அதன் தலைவர்கள் பற்றியும், எனக்கு பல விஷயங்கள் தெரியும். ஒவ்வொன்றாக அவற்றை வெளிப்படுத்துவேன்.

நாராயண் ராணே

மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X