அரசு மீதான வழக்குகள் அதிகரிப்பு ஆந்திராவில் அன்றாட பணி பாதிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அமராவதி:அவமதிப்பு வழக்குகளால், ஆந்திர மாநில அரசு நிர்வாகம் கடும் தள்ளாட்டத்தில் சிக்கியுள்ளது. வழக்கமான அரசுப் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.சுணக்கம்ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆந்திர அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் இதர

அமராவதி:அவமதிப்பு வழக்குகளால், ஆந்திர மாநில அரசு நிர்வாகம் கடும் தள்ளாட்டத்தில் சிக்கியுள்ளது. வழக்கமான அரசுப் பணிகளை செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.


சுணக்கம்

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆந்திர அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் இதர நீதிமன்றங்களில் ஆந்திர அரசு மீது 1.94 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுதவிர, நாளொன்றுக்கு சராசரியாக 450 புதிய வழக்குகள் தாக்கல் ஆகின்றன.இந்த வழக்குகளுக்கு தேவைப்படும் ஆவணங்களை தயார் செய்ய 40 ஆயிரம் பக்கங்கள் வேலை இருக்கும். இதனால் அரசின் வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை உடனுக்குடன் செயல்படுத்த முடியாமல் சில அதிகாரிகள் 8,000 அவமதிப்பு வழக்குகளுக்கு ஆளாகிஉள்ளனர்.

மன உளைச்சல்'முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அரசின் தவறான கொள்கையால் அரசின் மீதான வழக்குகள் 30 சதவீதம் அதிகரித்து உள்ளன' என, முன்னாள் அரசு தலைமை வக்கீல் தம்மலபதி ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். அரசு நிர்வாகம், அரசின் கொள்கை முடிவு மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்கு எதிராகத் தான் அரசு மீது ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருக்கு, உயர் நீதிமன்றம் சமீபத்தில் கைது 'வாரன்ட்' பிறப்பித்தது. இதுபோல பல வழக்கு களில் உயர் அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.நிலுவையில் இருக்கும் வழக்குகளால் அரசின் அன்றாட பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X