பொது செய்தி

இந்தியா

டில்லியில் பள்ளிகள் திறப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
புதுடில்லி:டில்லியில் கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், முதற்கட்டமாக செப்., 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது.இங்கு கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.தற்போது வைரஸ் பரவல் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால்,

புதுடில்லி:டில்லியில் கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகள், முதற்கட்டமாக செப்., 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி அமைந்துள்ளது.இங்கு கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை.தற்போது வைரஸ் பரவல் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால், செப்., 1ம் தேதி முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, டில்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. முடிவில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்., 1ல் பள்ளிகளை திறப்பது என முடிவு செய்யப்பட்டது.அதேபோல, 6 - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்., 8ம் தேதி வகுப்புகள் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X