அரசியல் செய்தி

தமிழ்நாடு

புகழுரை வேண்டாம் முதல்வர் கட்டளை

Updated : ஆக 27, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
சட்டசபையில், நேற்று சட்டத்துறை அமைச்சர், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன், மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது:அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய, நேரடியாக வர வேண்டும். பதில் அளித்து பேசும் போது, சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம்.தி.மு.க., -
புகழுரை வேண்டாம் ,முதல்வர் கட்டளை

சட்டசபையில், நேற்று சட்டத்துறை அமைச்சர், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன், மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது:அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய, நேரடியாக வர வேண்டும். பதில் அளித்து பேசும் போது, சில வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளலாம்.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள். பதிலுரையின் போது, உங்களை ஆளாக்கிய, உருவாக்கிய முன்னோடிகளுக்கு வணக்கம் செலுத்தி பேசுவது முறை. கேள்வி நேரத்தின் போதும், சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தும் போதும், அதை பயன்படுத்தக் கூடாது.நேரத்தின் அருமையை பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கிருக்கும் அமைச்சர்களுக்கு, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு, இது தான் என் கட்டளை.இவ்வாறு அவர் பேசினார்.




'மாஜி'க்களின் பேரன்கள்!



சட்டசபையில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன் பேசியதாவது:கருணாநிதியின் உற்ற நண்பர்களாக இருந்த, அன்பில், சி.வி.எம்., மற்றும் மண்ணை ஆகியோருக்கு 100 ஆண்டுகள் வந்து இரண்டு ஆண்டுகளாகின்றன. மூவரும் அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்கள் மூவருக்கும் நுாற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்.

இந்த 16வது சட்டசபையில், கருணாநிதி பேரன் உள்ளார். நீதிக்கட்சி வழித்தோன்றல் பி.டி.ஆர்., பேரன் உள்ளார். பேராசிரியர் பேரன் உள்ளார். அன்பில் பேரன் உள்ளார். சி.வி.எம்.அண்ணாமலை பேரன் உள்ளார். மூத்தவர்களை மறவாமல், அவர்களின் பேரக் குழந்தைகளை, எங்கள் தலைவர் அழைத்து வந்துள்ளார். அவருக்கு எங்கள் குடும்பம் சார்பில் நன்றி.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஆக-202104:47:59 IST Report Abuse
meenakshisundaram முக முன்னேற்ற கழகத்தின் (அங்கங்கே தமிழகத்தின் மூலைகளில் பிறந்து ) தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் 'வாரிசுகள் 'வரலாற்றை அடலீஸ்ட் ஒரு ஆயிரத்து முன்னூற்றி முப்பது வேண்டாம் ஒரு நூற்றி முப்பது குரல்கள் ஆவது (சுமார் நூற்றி முப்பது வாரிசுகளாவது இருப்பாங்க இல்லே ?) எழுத ஒரு நவீன 'வள்ளுவன் 'தேவை .உடன் விண்ணப்பிக்கவும் கொவாலாபுரம் அட்ரஸ்க்கு
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
28-ஆக-202113:58:23 IST Report Abuse
Kannan சிவன் இன்றி அமையாது உலகு.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-ஆக-202113:33:12 IST Report Abuse
அசோக்ராஜ் கவனிச்சு செய்யுங்க தளபதி எசமான்".
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X