தரமற்ற எம் - சாண்ட் விற்பனை கட்டுப்படுத்த நடவடிக்கை: வேலு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தரமற்ற 'எம் - சாண்ட்' விற்பனை கட்டுப்படுத்த நடவடிக்கை: வேலு

Added : ஆக 27, 2021
Share
பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு அறிவிப்புகள்:* கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும், 'எம் - சாண்ட்' தரத்தை உறுதி செய்யும் வகையில், தனியாரால் விற்கப்படும் தரமற்ற எம் - சாண்ட் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலக நடவடிக்கைகள் கணிணி மயமாக்கப்பட்டு, மொபைல் போன் வாயிலாக கண்காணிக்கப்படும்* தொழில்நுட்ப ஒப்புதல், ஒப்பந்தபுள்ளி வழங்கு வதற்காக, தலைமை

பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு அறிவிப்புகள்:

* கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும், 'எம் - சாண்ட்' தரத்தை உறுதி செய்யும் வகையில், தனியாரால் விற்கப்படும் தரமற்ற எம் - சாண்ட் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அலுவலக நடவடிக்கைகள் கணிணி மயமாக்கப்பட்டு, மொபைல் போன் வாயிலாக கண்காணிக்கப்படும்

* தொழில்நுட்ப ஒப்புதல், ஒப்பந்தபுள்ளி வழங்கு வதற்காக, தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் மற்றும் செயற்பொறியாளர்களுக்கு அதிகார வரம்பு உயர்த்தப்படும்

* சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை மறுசீரமைத்து, கோவையை தலைமை இடமாக வைத்து, புதிய மண்டலம் உருவாக்கப் படும்

* ஒப்பந்ததாரர் பதிவு, ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தலுக்கு பதிலாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்படும். புதிய ஒப்பந்ததாரர் பதிவு மற்றும் புதுப்பித்தல், மண்டல தலைமை பொறியாளர் அளவிலேயே இனி மேற்கொள்ளப்படும். 'பேக்கேஜ் டெண்டர்' நடைமுறை ரத்து செய்யப்படும்

* செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருப்பத்துார், தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்களில் தலா 7.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய சுற்றுலா மாளிகைகள் கட்டப்படும் திருச்சி, கடலுார், நாகப்பட்டினம், மதுரை, விருதுநகரில் தலா, ஒரு இடத்திலும், திருவண்ணாமலையில், செய்யாறு மற்றும் ஜமுனா மரத்துார் ஆகிய இடங்களிலும், 37.9 கோடி ரூபாய் செலவில் சுற்றுலா மாளிகை கட்டப்படும்

* மதுரை சுற்றுலா மாளிகை பிரதான கட்டடம் மற்றும் கூடுதல் கட்டடங்கள், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் கடலுாரில், மூன்று உபகோட்டங்கள், ஐந்து பிரிவு அலுவலகங்கள் உள்ளடக்கிய, ஒரு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் 4.65 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

கள்ளக்குறிச்சியில், மருத்துவப் பணிகள் பிரிவின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட அலுவலகங்கள்,2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்

* மதுரையில் 75 லட்சம் ரூபாய், திண்டுக்கல்லில் 45 லட்சம் ரூபாய், காரைக்குடியில் 1 கோடி ரூபாய், துாத்துக்குடியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், உபகோட்ட அலுவலக கட்டடங்கள் கட்டப்படும்

* சென்னை, தரமணியில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில், மழை நீர் வடிகால் அமைப்புகள், சேதமடைந்த உட்புற சாலைகள், சுற்றுச்சுவர் மற்றும் இதர மேம்பாட்டு பணிகள் 4.68 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். சேப்பாக்கம் பொதுப்பணித் துறை வளாகத்தில், பெண் பணியாளர்களுக்கு, 70 லட்சம் ரூபாய் செலவில் உணவுக்கூடம் அமைக்கப்படும்

* நீலகிரியில், அரசு பணியாளர்களின், பழைய குடியிருப்புகளுக்கு பதிலாக, 56.7 கோடி ரூபாய் செலவில், 160 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்

* திருச்சியில், 3.05 கோடி ரூபாய்; திருவாரூரில், ௧ கோடி; கோவையில், 4.25 கோடி ரூபாய் செலவில், பொதுப்பணித் துறை பொறியாளர்களுக்கு, 23 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்

* சென்னை, தண்டையார்பேட்டை, பொதுப்பணித்துறை பண்டக சாலை அரசு ஊழியர் குடியிருப்பில் 1.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 54 குடியிருப்புகள் புனரமைக்கப்படும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X