அரசியல் செய்தி

தமிழ்நாடு

செங்கல் சூளைக்கு மண் எடுக்க அனுமதி?

Added : ஆக 27, 2021
Share
Advertisement
அ.தி.மு.க., - ஏ.கே.செல்வராஜ்: மேட்டுப்பாளையம் புறவழி சாலைத் திட்டம், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு அதிகரித்ததால் கூடுதல் தொகை தேவைப்படுகிறது. எனவே, அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, பணியை விரைவுபடுத்த வேண்டும்.கோவை மேற்கு புறவழி சாலைத் திட்டத்திற்கு 321 கோடி ரூபாயை பழனிசாமி ஒதுக்கினார். நிலம் எடுப்பு பணி நடந்து

அ.தி.மு.க., - ஏ.கே.செல்வராஜ்:

மேட்டுப்பாளையம் புறவழி சாலைத் திட்டம், ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு அதிகரித்ததால் கூடுதல் தொகை தேவைப்படுகிறது. எனவே, அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, பணியை விரைவுபடுத்த வேண்டும்.

கோவை மேற்கு புறவழி சாலைத் திட்டத்திற்கு 321 கோடி ரூபாயை பழனிசாமி ஒதுக்கினார். நிலம் எடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியை விரைவுபடுத்த வேண்டும். ஊட்டிக்கு மாற்று சாலை திட்டம் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது. இச்சாலை வனப்பகுதியில் காரமடை வழியே செல்கிறது. இச்சாலையை அகலப்படுத்த வனத்துறை அனுமதி கோரப்பட்டது; இன்னும் கிடைக்கவில்லை. வனத்துறை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்கள் இணைந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

கோவை மாவட்டத்தின் கவுண்டம்பாளையம் பகுதியில் 170 செங்கல் சூளைகள் உள்ளன. மேட்டுப்பாளையத்தில் 20 செங்கல் சூளைகள் உள்ளன. அவர்கள் செம்மண் எடுக்க, கலெக்டர் தடை விதித்துள்ளார். செம்மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும். செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர், நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பிரச்னை, பல மாவட்டங்களில் உள்ளது.

அமைச்சர் துரைமுருகன்:

செங்கல் சூளைக்கு மண் எடுப்பது தொடர்பாக தேர்தலின் போது முதல்வர் பேசி உள்ளார். அதை மனதில் வைத்து, செங்கல் சூளை அதிபர்கள் என்னை சந்தித்தனர். இது தொடர்பாக, கடந்த ஆட்சியில் ஒரு ஆணை பிறப்பித்திருந்தனர். அதில் சில தவறுகள் இருந்தன. நீதிமன்றம் சென்றால் அடிபடும் நிலை இருந்தது. எனவே, சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டது. இன்று அல்லது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X