அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் சட்டசபையாக்க கோரிக்கை

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
ம.தி.மு.க., - சதன் திருமலை குமார்: முதல்வ ராக கருணாநிதி இருந்தபோது, பார்த்து பார்த்து புதிய சட்டசபை கட்ட டத்தை கட்டினார். அந்த சட்டசபையில், நானும் ஒரு எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். மிக கம்பீரமாக இருந்த சட்டசபை கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிவிட்டனர்.இந்த பகுதியை ஒட்டி சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரிகள், ராயப்பேட்டை அரசு
 அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் சட்டசபையாக்க கோரிக்கை


ம.தி.மு.க., - சதன் திருமலை குமார்:



முதல்வ ராக கருணாநிதி இருந்தபோது, பார்த்து பார்த்து புதிய சட்டசபை கட்ட டத்தை கட்டினார். அந்த சட்டசபையில், நானும் ஒரு எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். மிக கம்பீரமாக இருந்த சட்டசபை கட்டடத்தை, பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றிவிட்டனர்.

இந்த பகுதியை ஒட்டி சென்னை கீழ்ப்பாக்கம், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரிகள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன. குறிப்பிட்ட பகுதிக்குள் சிறந்த, பெரிய மருத்துவ மனைகள் உள்ளன. எனவே, அங்கு மருத்துவமனை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அங்குள்ள மருத்துவமனையை தென்சென்னைக்கு மாற்ற வேண்டும்.

இதை மீண்டும் சட்ட சபையாக மாற்றி தர வேண்டும்.அப்போது தான், நம் நெஞ்சங்களில் வாழும் கருணாநிதி, நிம்மதியாக உறங்குவார்.


காங்., - சிவகுமார்:



புதிய சட்டசபை கட்டடம் கட்டும் போது, தினமும் ஒரு மணி நேரம் வந்து, கருணாநிதி பார்த்து செல்வார்.அனைவரும் உட்காரும் வகையில், அந்த கட்டடம் விசாலமாக இருந்தது. அந்த அளவிற்கு சிறப்பான கட்டடத்தை கருணாநிதி கட்டினார்.அரசியல் ரீதியாக சிந்திக்காமல், கருணா நிதி முதல்வராக இருந்த இடம் என்பதை நினைத்து, அந்த மருத்துவமனையை வேறு இடத்தில் கட்டிக் கொடுக்க வேண்டும்.

பெருமையை நிலைநாட்ட, இந்த விஷயத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.அப்போது, சபையில் இருந்த முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்கள், இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
03-செப்-202105:52:09 IST Report Abuse
meenakshisundaram ஏதோ நடந்துக்கிட்டிருக்கு -அந்த கட்டிடத்தையும் சட்டசபையாக மாற்றி அசிங்கம் செய்ய வேண்டாம் ஆமா ,ஏன் ஸ்டாலினுக்கு இது தோணலை ?புதுசா சட்ட சபை கட்டிடம் கொவால புறத்திலே கட்டலாமே கமிசன் ,கமிசன் .கமிசன் ஆட்சிக்கு வித்திட லாமே ?
Rate this:
Cancel
INNER VOICE - MUMBAI,இந்தியா
01-செப்-202111:59:18 IST Report Abuse
INNER VOICE விஞ்ஞான ஊழல் மன்னனின் நினைவாலயம்,இப்போதைக்கு அம்புட்டுதான் சொல்ல முடியும். உங்களுக்கு அதன் ரஹஸ்யம் தெரியாததா?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-ஆக-202120:58:42 IST Report Abuse
அசோக்ராஜ் தஞ்சாவூர் கோவில் மெயின் கேட் ராசிதான் இந்தத் தண்ணித் தொட்டிக்கும். நுளைஞ்சவன் மறுக்கா பதவிக்கு வர முடியாது. அதனால்தான் ஆட்சித் தரப்பில் மயான ... ஐயாம் சாரி ... கல்லறை அமைதி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X