அரசியல் செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா எம்.பி., இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை:ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., வேட்பாளர் முகமதுஅப்துல்லா, வேட்பு மனு தாக்கல் செய்தார்.தமிழகத்தில், ராஜ்யசபா எம்.பி., பதவியில், மூன்று இடங்கள் காலியாக உள்ளன.அதில் ஒரு பதவிக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.முதல் நாளில், மூன்று சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.தி.மு.க., சார்பில், புதுக்கோட்டையை சேர்ந்த,
 ராஜ்யசபா எம்.பி., இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கல்

சென்னை:ராஜ்யசபா இடைத்தேர்தலில் போட்டியிட, தி.மு.க., வேட்பாளர் முகமதுஅப்துல்லா, வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில், ராஜ்யசபா எம்.பி., பதவியில், மூன்று இடங்கள் காலியாக உள்ளன.அதில் ஒரு பதவிக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 24ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் துவங்கியது.முதல் நாளில், மூன்று சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.தி.மு.க., சார்பில், புதுக்கோட்டையை சேர்ந்த, எம்.பி.ஏ., பட்டதாரியான முகமது அப்துல்லா, 46 வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர், நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், சட்டசபை செயலர் சீனிவாசனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி, சிவா மற்றும்நிர்வாகிகள் உடனிருந்தனர். தி.மு.க., வேட்பாளர் முகமது அப்துல்லா, தன் பெயரில், 3.78 கோடி ரூபாய்; மனைவி பெயரில், 1.62 கோடி ரூபாய் அசையும் சொத்துக்கள்; மனைவி பெயரில், 1.28 கோடி ரூபாய் அசையாச் சொத்துக்கள் உள்ளதாக, வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.தி.மு.க.,வுக்கு அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ளதால், அவரது வெற்றி உறுதியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X