அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினுக்கு மைத்ரேயன் வேண்டுகோள்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : 'ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வேணடுகோள் விடுத்துள்ளார்.அவரது அறிக்கை:ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017 செப். 15ல் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை 90 சதவீதம் முடிந்த நிலையில் 2019 ஏப்ரலில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் கமிஷனுக்கு
 முதல்வர் ஸ்டாலின்,  மைத்ரேயன் , வேண்டுகோள்

சென்னை : 'ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் வேணடுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017 செப். 15ல் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை 90 சதவீதம் முடிந்த நிலையில் 2019 ஏப்ரலில் அப்பல்லோ மருத்துவமனை உச்ச நீதிமன்றத்தில் கமிஷனுக்கு எதிராக தடையாணை பெற்றது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக அறிகிறேன்.

ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை என்ற முடிவு வந்தால் ஒவ்வொரு அ.தி.மு.க. தொண்டனும் அளவற்ற மகிழ்ச்சி அடைவதோடு நிம்மதி பெருமூச்சும் விடுவான்.எனவே முதல்வர் தனிக் கவனம் செலுத்தி உச்ச நீதிமன்றத்தில் உள்ள தடையை விரைந்து நீக்க வேண்டும். நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க செய்ய வேண்டும். அதன் வழியாக ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளுக்குள் முதல்வர் நிச்சயம் செய்வார் என்று நம்புகிறேன்.இவ்வாறு மைத்ரேயன் கூறியுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
28-ஆக-202119:10:15 IST Report Abuse
Vijay D Ratnam அது அப்போலோதான் சொல்லணும். டாக்டர்கள்தான் சொல்லணும். மர்மம் மண்ணாங்கட்டி எல்லாம்.
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
28-ஆக-202113:39:17 IST Report Abuse
அசோக்ராஜ் டாக்டர் மைத்ரேயன் கட்சி தாவாமல் இருந்திருந்தால் இன்று பஞ்சாப் கவர்னர் பதவி கிடைத்திருக்கும். என்ன செய்வது? அது போகட்டும். மணிப்பூர் கவர்னருக்கு பாராட்டாவது தெரிவிச்சீங்களா?
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
28-ஆக-202112:53:04 IST Report Abuse
sankaseshan Mr.Maithreyan please don't degrade yourself by asking CM. They don't worth it . Whatever had to happen, it Will .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X