பொது செய்தி

தமிழ்நாடு

'100 நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பு'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருப்பூர்:''திருப்பூர் ஆடைகள் இதுவரை செல்லாத, நுாறு நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று, ஆடிட்டர் ராமநாதன் பேசினார்.திருப்பூர், ஸ்ரீ புரம் அறக்கட்டளை 8வது பொதுக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. செயலாளர் காண்டீபன் வரவேற்றார். தலைவர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை வகித்தார். வரவு- செலவு அறிக்கையை பொருளாளர்
 '100 நாடுகளில் ஏற்றுமதி வாய்ப்பு'

திருப்பூர்:''திருப்பூர் ஆடைகள் இதுவரை செல்லாத, நுாறு நாடுகளில் உள்ள வர்த்தக வாய்ப்புகளை, ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று, ஆடிட்டர் ராமநாதன் பேசினார்.திருப்பூர், ஸ்ரீ புரம் அறக்கட்டளை 8வது பொதுக்குழு கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. செயலாளர் காண்டீபன் வரவேற்றார். தலைவர் ஜெயசித்ரா சண்முகம் தலைமை வகித்தார். வரவு- செலவு அறிக்கையை பொருளாளர் மெஜஸ்டிக் கந்தசாமி விளக்கினார்.தற்போதுள்ள நிர்வாகிகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தொடர்வர் என அறிவிக்கப்பட்டது. நிர்வாகிகளை ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் அறிமுகம் செய்து வைத்து பேசினார். துணைத்தலைவர்கள் கந்தசாமி, பழனிசாமி உள்ளிட்டோர் பேசினர்.ஆடிட்டர் ராமநாதன் பேசியதாவது:உலகில் நிறைய மாற்றங்களை 'கொரோனா' உருவாக்கி விட்டது. ஒவ்வொருவருக்கும் பல பாடங்களை கற்றுத்தந்துள்ளது. ஏற்றுமதி ஒருபுறம் இருந்தாலும், உள்நாட்டு உற்பத்தியிலும் கவனம் செலுத்த வேண்டும்.'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' வளர்ச்சி அடைந்து வருகிறது. தனியே ஒரு குழுவை அமைத்து, கவனம் செலுத்த வேண்டும். உலகில், 100 நாடுகளுக்கு திருப்பூர் பின்னலாடைகள் செல்லாமல் உள்ளன. அங்கு நம் ஆடைகள் செல்ல முயற்சிக்க வேண்டும்.எதிர்பார்ப்பு இல்லாமல் உதவி செய்யும் மனம், தொழிலில் திறமையானவர்களை தேடி பிடித்து உருவாக்குதல், புதிய வாய்ப்புக்கான தேடல் அவசியம்.இவ்வாறு, ராமநாதன் பேசினார். அறக்கட்டளை இணை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X