7,200 ஆண்டுக்கு முந்தைய எலும்புக் கூடு கண்டுபிடிப்பு

Added : ஆக 27, 2021
Share
Advertisement
ஜகார்தா:இந்தோனேஷியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடு படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசி பகுதியில், 2015 முதல் தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லியாங் பனின்கே பகுதியில் உள்ள சுண்ணாம்பு குகையை ஆய்வு செய்த போது, 18 வயது மதிக்கத்தக்க ஒரு

ஜகார்தா:இந்தோனேஷியாவில் 7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடு படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த இந்தோனேஷியாவின் தெற்கு சுலாவெசி பகுதியில், 2015 முதல் தொல்லியல் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் லியாங் பனின்கே பகுதியில் உள்ள சுண்ணாம்பு குகையை ஆய்வு செய்த போது, 18 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் எலும்புக் கூடு படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலியாவின் கிரிபித் பல்கலை தொல்லியல் ஆய்வாளர் ஆடம் பிரம் கூறியதாவது:ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உள்ள தீவுப் பிராந்தியத்தில் தோலியன் எனப்படும் வேடர் சமூக மக்கள் வாழ்ந்துள்ளனர். இங்கு தோலியன்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.அவற்றுள் உலகிலேயே முதன் முறையாக 7,200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தோலியன் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் எலும்புக் கூடு படிமம் கிடைத்துள்ளது.

வயிற்றில் உள்ள கருவின் வடிவில் அந்த பெண் புதைக்கப்பட்டுள்ளார். இந்த எலும்புக் கூட்டின் ஆராய்ச்சியில் உலகில் வேறு எங்கும் கிடைக்காத, மிகப் பழமையான மனித மரபணு விபரங்கள் கிடைத்துள்ளன. வெப்ப மண்டலத்தில் மிகப் பழமையான மரபணுக்கள் கிடைப்பது அரிது. எனவே இந்த கண்டுபிடிப்பு, தொல்லியல் ஆய்வாளர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும்.

இந்த மரபணு, ஆஸ்தி ரேலிய பழங்குடியினர் மற்றும் நவீன பப்புவா மக்களின் மரபணுக்களுக்கு சமமாக உள்ளது. அதேசமயம், இதுவரை அறியப்படாத மரபணுவாகவும் காணப்படுகிறது. இந்த பிராந்தியத்தில் மனிதர்களின் குடியமர்வு குறித்த வரலாற்று ஆசிரியர்களின் முந்தைய ஆய்வுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அந்த பெண்ணின் மரபணு உள்ளது.

இதன் வாயிலாக இந்தோனேஷியாவின் வலாசியன் தீவுகளில் வாழ்ந்த பழங்கால மனிதர்கள் பற்றி, இதுவரை நாம் மிகக் குறைவாகவே புரிந்து கொண்டிருக்கிறோம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X