பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கும்பாபிஷேகம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதையடுத்து, கோவில் நிர்வாகிகள், மஹா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தனர்.நேற்று, காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மஹா

திருத்தணி : திருத்தணி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதையடுத்து, கோவில் நிர்வாகிகள், மஹா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தனர்.நேற்று, காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

உளுந்தை

உளுந்தை ஊராட்சியில், மணிகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் உள்ளது மணிகண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், நேற்று காலை, 8:45 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக, காலை, 8:30 மணிக்கு, கலச புறப்பாடும் அதை தொடர்ந்து விமான மஹா கும்பாபிஷேகமும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.அன்று மாலை, மஹா அபிஷேகமும் தொடர்ந்து திருக்கல்யாணமும் மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X