பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கப் பள்ளி திறக்க  மாநாட்டில் தீர்மானம்

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருத்தணி : தொடக்கப் பள்ளிகளையும் திறந்து கொரோனா வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு, மாவட்ட தலைவர் கலைநேசன் தலைமையில்

திருத்தணி : தொடக்கப் பள்ளிகளையும் திறந்து கொரோனா வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு, மாவட்ட தலைவர் கலைநேசன் தலைமையில் நடந்தது.மாவட்ட துணை தலைவர் அருணவடிவேலு வரவேற்றார். ஒன்றிய செயலர் லதா ஆண்டறிக்கை வாசித்தார்.இதில், கல்வியாளர் கிருஷ்ணமூர்த்தி, விஞ்ஞானி மருத்துவர் ராஜேந்திரன், கல்லுாரி பேராசிரியர் ஜெயலாப்தீன் ஆகியோர் பேசினார்.

கூட்டத்தில் அனைவரும் கழிப்பறை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும், பெண் கல்வி ஊக்கப்படுத்தி, பெண்களின் உரிமைகளை காக்க வேண்டும்.தொடக்கப் பள்ளிகளையும் திறந்து, கொரோனா நெறிமுறைகள்படி வகுப்பறையில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X