தமிழ்நாடு

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து

Added : ஆக 27, 2021
Share
Advertisement
சென்னை : ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை, 11:00 மணி, 11:45 மணி மற்றும், தாம்பரத்தில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.கடற்கரை நிலையத்தில் இருந்து, காலை, 11:15 மணி, பகல், 12:00 மணி, மதியம்,

சென்னை : ரயில் பாதையில், பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை, 11:00 மணி, 11:45 மணி மற்றும், தாம்பரத்தில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடற்கரை நிலையத்தில் இருந்து, காலை, 11:15 மணி, பகல், 12:00 மணி, மதியம், 1:20 மணி, 2:00 மணிக்கு செங்கல்பட்டுக்கும், அரக்கோணத்துக்கு மதியம், 1:00 மணிக்கும் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள், கடற்கரை - எழும்பூர் இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

கடற்கரை நிலையத்தில் இருந்து, தாம்பரத்துக்கு, காலை, 11:30 மணி, நண்பகல், 12:20 மணி, 12:40 மணி, மதியம், 1:40 மணி, மதியம், 2:30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், கடற்கரை - எழும்பூர் இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன

தாம்பரத்தில் இருந்து, கடற்கரை நிலையத்துக்கு, காலை, 10:20 மணி, 11:30 மணி, நண்பகல், 12:10 மணி, 12:30 மணி மற்றும், மதியம், 1:50 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், நாளை எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும்

காஞ்சிபுரத்தில் இருந்து, காலை, 8:45 மணிக்கும், திருமால்பூரில் இருந்து, காலை, 10:40 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, காலை, 10:15 மணி, 11:00 மணி, மற்றும், நண்பகல், 12:25 மணிக்கு கடற்கரை நிலையத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X