தமிழ்நாடு

'கொரோனா 3வது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி போடுங்கள்'

Added : ஆக 27, 2021
Share
Advertisement
திருத்தணி : 'கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள முன் வர வேண்டும்' என, திருத்தணியில் கலெக்டர் தெரிவித்தார்.திருத்தணி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம்சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா திருத்தணியில் நேற்று நடந்தது.இதில், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான்வர்கீஸ் தலைமை வகித்து,769

திருத்தணி : 'கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள முன் வர வேண்டும்' என, திருத்தணியில் கலெக்டர் தெரிவித்தார்.

திருத்தணி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் தனியார் தொண்டு நிறுவனம்சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா திருத்தணியில் நேற்று நடந்தது.

இதில், திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான்வர்கீஸ் தலைமை வகித்து,769 மாற்றுத்திறனாளிகளுக்கு, 45.16 லட்சம்ரூபாய் மதிப்பில், 833 உதவி உபகரணங்கள் வழங்கி பேசியதாவது: மாவட்டத்தில் இதுவரை, 23,322 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, கல்வி, மருத்துவம், பொருளாதாரம் மற்றும் பராமரிப்பு திட்டம் கீழ், 8,450 பேருக்கு, 22.34 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஆண்டுதோறும், 584 மாற்றுத்திறனாளிகளுக்கு, 1.02 கோடி ரூபாய் மதிப்பில், உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று, தனியார் தொண்டு நிறுவனம் மூலம், 232 பயனாளிகளுக்கு, 31.30 லட்சம் ரூபாய், அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் கீழ், 537 குழந்தைகளுக்கு, 13.86 லட்சம் ரூபாய் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா, 3வது அலையை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன் வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் முனிசுப்ராயன், எஸ்.எஸ்.ஏ., மேற்பார்வையாளர் சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு உட்பட பலர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X