தலிபான் பயங்கரவாதிகளிடம் அமெரிக்க ராணுவ உபகரணங்கள்

Updated : ஆக 28, 2021 | Added : ஆக 27, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன்:''அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஆறு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தலிபான் வசம் உள்ளன,'' என, அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி., ஜிம் பேங்க்ஸ் எச்சரித்துள்ளார்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக ராணுவ முகாம் அமைத்து ஆப்கன் படைகளுக்கு பயிற்சி அளித்து வந்த
taliban, america, military, vehicles, helicopters, தலிபான், அமெரிக்கா, மிலிட்டரி, வாகனங்கள், ஹெலிகாப்டர்,

வாஷிங்டன்:''அமெரிக்க ராணுவத்துக்கு சொந்தமான ஆறு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்கள், ராணுவ வாகனங்கள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் தலிபான் வசம் உள்ளன,'' என, அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி., ஜிம் பேங்க்ஸ் எச்சரித்துள்ளார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக ராணுவ முகாம் அமைத்து ஆப்கன் படைகளுக்கு பயிற்சி அளித்து வந்த அமெரிக்க படையினர் 95 சதவீதம் பேர் ஆப்கனை விட்டு வெளியேறி விட்டனர்.மீதமுள்ள 5 சதவீத வீரர்கள், வரும் 31க்குள் வெளியேறுவர். ஆப்கன் ராணுவத்தை நவீனப்படுத்த பல லட்சம் கோடி ரூபாய் பணத்தை அமெரிக்க ராணுவம் செலவிட்டுள்ளது. அதிநவீன ஆயுதங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ஆப்கனுக்கு வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news


தற்போது தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்க ராணுவம் வழங்கிய ராணுவ உபகரணங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன.இது குறித்து அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி., ஜிம் பேங்க்ஸ் கூறியதாவது:

அமெரிக்க ராணுவம் வழங்கிய 75 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 200 விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், ஆறு லட்சம் சிறிய ரக துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் தலிபான் வசம் சென்றுள்ளன.உலகின் 85 சதவீத நாடுகளின் வசம் உள்ளதை விட அதிகமான, 'பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள்' தற்போது தலிபானிடம் உள்ளன. மொத்தம் ஆறு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க ராணுவ உபகரணங்கள் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த ஆயுதங்களை வைத்து இப்போதோ அல்லது வருங்காலத்தி லோ, அமெரிக்கர்கள் கொல்லப்பட்டால் அந்த ரத்தக் கறை, அதிபர் ஜோ பைடன் கரங்களில் படியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
29-ஆக-202104:58:37 IST Report Abuse
meenakshisundaram இவங்க இதை பாகிஸ்தானுக்கு 'விற்று விடுவாங்க '
Rate this:
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
28-ஆக-202113:51:23 IST Report Abuse
raghavan தான் போனபின் ரஷ்யா வந்துவிட கூடாது..மற்றபடி எவன் செத்தால் அவர்களுக்கு என்ன.
Rate this:
Cancel
Rajagopal - Chennai,இந்தியா
28-ஆக-202113:45:10 IST Report Abuse
Rajagopal அமெரிக்காவின் பப்பு பைடென்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X