மழையில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையில் ஓட்டு வீடு இடிந்து விழுந்து சேதம்

Added : ஆக 27, 2021
Share
பொன்னேரி : பொன்னேரி அருகே, திடீரென சூறைகாற்றுடன் பெய்த மழையில், ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.பொன்னேரி அடுத்த, கம்மார்பாளையம் சின்னமனோபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுகேந்தர், 36. ஓட்டு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை, திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது, யுகேந்திரன் வீட்டின் அருகில் இருந்து வேப்பம் மரம் ஒன்று வேருடன்

பொன்னேரி : பொன்னேரி அருகே, திடீரென சூறைகாற்றுடன் பெய்த மழையில், ஓட்டு வீடு இடிந்து விழுந்தது.

பொன்னேரி அடுத்த, கம்மார்பாளையம் சின்னமனோபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யுகேந்தர், 36. ஓட்டு வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.இந்நிலையில், நேற்று மாலை, திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையின்போது, யுகேந்திரன் வீட்டின் அருகில் இருந்து வேப்பம் மரம் ஒன்று வேருடன் பெயர்ந்து, இவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.இதில், ஓடுகள் உடைந்தும், பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும் விழுந்தன.

வீட்டின் உள்ளே இருந்து யுகேந்தர் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர் தப்பினர்.புயல் காற்றால் யுகேந்தரின் வீடும், வீட்டில் இருந்து உடமைகளும் முற்றிலும் சேதம் அடைந்தன. பொன்னேரி வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X