சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்போரூர் : திருப்போரூர் வட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர்.தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று தமிழகம் முழுதும் நடந்தது.அதன்படி, திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய திருப்போரூர், காலவாக்கம், தண்டலம், செம்பாக்கம்

திருப்போரூர் : திருப்போரூர் வட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடத்தினர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று தமிழகம் முழுதும் நடந்தது.அதன்படி, திருப்போரூர் வட்டத்தில் அடங்கிய திருப்போரூர், காலவாக்கம், தண்டலம், செம்பாக்கம் உள்ளிட்ட கிராம வி.ஏ.ஓ., அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.இதில், சங்கத்தின் ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாற்றுத்திறனாளிகள், மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையை 1,000 ரூபாயிலிருந்து 1,500 ரூபாய் உயர்த்தப்படும் என, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், அரசு, -தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வலியுறுத்தியும் இதனுடன் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தியும், கோஷங்களை எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X