விளம்பர பலகை அகற்ற நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளம்பர பலகை அகற்ற நடவடிக்கை

Added : ஆக 28, 2021
Share
காஞ்சிபுரம்: அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் தொடர்கிறது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், பெரிய அளவிலான விளம்பர பலகைகள்

காஞ்சிபுரம்: அனுமதியின்றி சாலையோரம் வைக்கப்படும் விளம்பர பலகைகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அகற்றப்படாமல் தொடர்கிறது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், பெரிய அளவிலான விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. சுப்ரீம் கோர்டு உத்தரவை மீறி, விளம்பர பலகைகள் வைப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அதேபோல், உத்திரமேரூர் பேரூராட்சியிலும், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையிலும், காஞ்சிபுரம் நகரிலும் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.அவற்றை அகற்ற அதிகாரிகளும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்காமல் கண்டும் காணாமல் உள்ளது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தியிடம் கேட்டபோது, ''அனுமதி பெறாமல் அவர்களாகவே விளம்பர பலகைகளை வைத்துக் கொள்கின்றனர். அவற்றை அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். சாலையோரம் வைத்துள்ள விளம்பர பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X