பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் முயற்சி: வீண் குப்பை தொட்டியானது

Added : ஆக 28, 2021
Share
Advertisement
பல்லடம்;பல்லடம் அடுத்த அல்லாளபுரம், அவரப்பாளையம், நொச்சிபாளையம் கடைமடை வரை செல்லும் பி.ஏ.பி., கிளை வாய்க்கால், கடந்த ஆறு ஆண்டாக மாயமாகி கிடந்தது. அப்பகுதி விவசாயிகள் தாங்களாக முயன்று, வாய்க்காலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''ஊராட்சியின் பங்களிப்புடன் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வந்தது. தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்
 விவசாயிகள் முயற்சி: வீண்  குப்பை தொட்டியானது

பல்லடம்;பல்லடம் அடுத்த அல்லாளபுரம், அவரப்பாளையம், நொச்சிபாளையம் கடைமடை வரை செல்லும் பி.ஏ.பி., கிளை வாய்க்கால், கடந்த ஆறு ஆண்டாக மாயமாகி கிடந்தது. அப்பகுதி விவசாயிகள் தாங்களாக முயன்று, வாய்க்காலை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறுகையில், ''ஊராட்சியின் பங்களிப்புடன் வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வந்தது. தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விரைவில் தண்ணீர் வினியோகிக்கப்படும் என்றனர்.ஆனால், அதன் பிறகு, கிளை வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்துவிடுவது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தற்போது, குப்பைகள் கொட்டப்பட்டு, வாய்க்கால் பழையபடி குப்பை தொட்டியாகி வருகிறது. ஆறு ஆண்டுக்கு பின் தண்ணீரை எதிர்பார்த்து வாய்க்காலை துார் வாரினோம். ஆனால், அது வெறும் கானல் நீராக உள்ளது'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X