பொது செய்தி

தமிழ்நாடு

செங்கையில் விளம்பர பலகை அகற்றம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
செங்கல்பட்டு :செங்கல்பட்டில், விளம்பர பலகையை நகராட்சி ஊழியர்கள், நேற்று, அகற்றினர்.செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் துவங்கி, ராட்டிணங்கிணறு வரை, ஜி.எஸ்.டி., சாலையில், தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.இதனால், வாகன ஓட்டிகள் பஸ் மற்றும் கனரக வாகன ஓட்டிகளின் கவனம் சிதறும் வகையில், உயரமான விளம்பர பலகைகள் வைத்திருப்பது

செங்கல்பட்டு :செங்கல்பட்டில், விளம்பர பலகையை நகராட்சி ஊழியர்கள், நேற்று, அகற்றினர்.

செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையில், பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் துவங்கி, ராட்டிணங்கிணறு வரை, ஜி.எஸ்.டி., சாலையில், தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.இதனால், வாகன ஓட்டிகள் பஸ் மற்றும் கனரக வாகன ஓட்டிகளின் கவனம் சிதறும் வகையில், உயரமான விளம்பர பலகைகள் வைத்திருப்பது அதிகரித்துள்ளது. இதே போன்று, புறவழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளிலும், தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள. விளம்பர பலகையில் இருந்த, பேனர்களை மட்டும், நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.ஆனால், விளம்பர தகடுகள் அகற்றப்படாமல் உள்ளன. செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி கூறுகையில், ''செங்கல்பட்டு நகராட்சி பகுதியில் உள்ள, விளம்பர பலகையில் இருந்த பேனர்களை அகற்றி உள்ளோம். முழுமையாக அகற்ற, தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மூன்று தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X