பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி விலை சரிவு

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:உழவர் சந்தை மொத்த காய்கறி வரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று அதிகளவில் காய்கறி வந்ததால், பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.கடந்த வாரம், 30 ரூபாய் ஆக இருந்த, கத்தரி கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 25 ஆகியுள்ளது. பந்தல் காய்கறியான பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய் கிலோ, 30 முதல், 35 ரூபாய் விற்ற நிலையில், நேற்று கிலோ, 25 ரூபாயாக

திருப்பூர்:உழவர் சந்தை மொத்த காய்கறி வரத்துக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று அதிகளவில் காய்கறி வந்ததால், பெரும்பாலான காய்கறிகளின் விலை குறைந்து விட்டது.கடந்த வாரம், 30 ரூபாய் ஆக இருந்த, கத்தரி கிலோவுக்கு ஐந்து ரூபாய் குறைந்து, 25 ஆகியுள்ளது. பந்தல் காய்கறியான பாகற்காய், பீர்க்கங்காய், புடலங்காய் கிலோ, 30 முதல், 35 ரூபாய் விற்ற நிலையில், நேற்று கிலோ, 25 ரூபாயாக குறைந்தது.குறிப்பாக, அவரை இரு வாரங்களுக்கு முன் தட்டுப்பாடு காரணமாக கிலோ, 45 ரூபாய் வரை விற்கப்பட்டது. நேற்று கிலோ, 20 ரூபாயாக இருந்தது.சின்ன வெங்காயம் விலை குறைந்து கிலோ 30 ரூபாய்க்கு விற்றது. ஆனால், பெரிய வெங்காயம் (கிலோ 25 ரூபாய்) விலையில் மாற்றமில்லை.மழையால், அதிகளவு கேரட், பீன்ஸ் தினமும் திருப்பூர் வருகிறது. கடந்த வாரம் கிலோ 75 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், நேற்று, 65 ரூபாய்க்கும், பீன்ஸ், 35 ரூபாய்க்கும் விற்றது.வெண்டை - 20, பச்சை மிளகாய் - 30, உருளை - 30, இஞ்சி - 50, மேராக்காய் - 16, பீட்ரூட் - 30 ரூபாய். மழைக்கு தாக்கு பிடிக்க முடியாததால், முட்டைகோஸ் விலை சரிந்து, கிலோ, 15 ரூபாய்க்கு விற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X