கர்நாடகாவில் கமல் கட்சி?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவில் கமல் கட்சி?

Added : ஆக 28, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:கர்நாடகாவிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்க, அக்கட்சியின் தலைவர் கமல் ஆலோசித்து வருகிறார்.தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி புதுச்சேரியிலும் செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் கமல், கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இணை மற்றும் துணை செயலர்கள், கொள்கை ஆராய்ச்சி பிரிவு, பயிற்சி திறன்

சென்னை:கர்நாடகாவிலும் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்க, அக்கட்சியின் தலைவர் கமல் ஆலோசித்து வருகிறார்.

தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி புதுச்சேரியிலும் செயல்படுகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வரும் கமல், கட்சியில் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இணை மற்றும் துணை செயலர்கள், கொள்கை ஆராய்ச்சி பிரிவு, பயிற்சி திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய பதவிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, நிர்வாகிகளை சந்தித்து வந்த கமலிடம் சிலர், கர்நாடகாவிலும் கட்சி துவக்க வேண்டும் என்ன, கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, மாநில துணைத் தலைவர் மவுரியா, 'விரைவில் கர்நாடகத்தில், மக்கள் நீதி மய்யம் உருவாகும்' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X