மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 28, 2021
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை போல தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கடும் பாதிப்புள்ளோருக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் ஹரிஹரசுதன்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி, தெலுங்கானா மாநிலங்களை போல தமிழகத்திலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கடும் பாதிப்புள்ளோருக்கு ரூ.3000 முதல் ரூ.5000 வரை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட பொருளாளர் ஹரிஹரசுதன் தலைமை வகித்தார்.துணை செயலாளர் நிலர்வேணி முன்னிலை வகித்தார். அனைத்துஇந்திய ஜனநாயக மாதர்சங்கம் மாவட்ட செயலாளர் கண்ணகி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட, நகர், புறநகர் குழு உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.


சிக்கல்

இதேபோல் சிக்கல் வருவாய் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கைகளில் பதாகை ஏந்தி கோஷமிட்டவாறு பங்கேற்றனர்.l முதுகுளத்துார், கமுதி தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முனியசாமி தலைமை வகித்தார். கமுதி தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X