பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்

Added : ஆக 28, 2021
Share
Advertisement
திருப்பூர்:வரும், செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிளைகள் வாரியாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக விழுப்புரத்தில் இருந்து வந்துள்ள, 25க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அடங்கிய குழு சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மூன்று முதல் ஒன்பது அடி
 விநாயகர் சிலை தயாரிப்பு மும்முரம்

திருப்பூர்:வரும், செப்., 10ல் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது.ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் கூறியதாவது:திருப்பூர் மாவட்டம் முழுவதும் கிளைகள் வாரியாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக விழுப்புரத்தில் இருந்து வந்துள்ள, 25க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அடங்கிய குழு சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மூன்று முதல் ஒன்பது அடி உயரம் வரையிலான சிலைகள் பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்படுகிறது. இதில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், எலி வாகனம் என பல்வேறு வாகனங்களில் அமர்ந்து காட்சியளிக்கும் விநாயகர் சிலைகள் அமைக்கப்படுகிறது.நடப்பாண்டு, 'கோவில்களைக் காக்க, ஹிந்துக்கள் ஒன்றுபடுவோம்' என்ற தலைப்பில், விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோவில்களை அவற்றில் வழிபாடு செய்யும் ஹிந்துக்கள் மட்டுமே பராமரித்து வழி நடத்த வேண்டும்.அரசுக்கோ, அறநிலையத் துறை என்ற அதிகார வட்டத்துக்கோ ஹிந்து கோவில்கள், வழிபாட்டு தலங்கள் அடங்கி விடக்கூடாது. அதன் மீதான உரிமை என்பது அவற்றை நம்பும், மத கோட்பாடுகளை பின்பற்றும் உண்மையான பக்தர்களுக்கு மட்டுமே உரியது என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X