பொது செய்தி

தமிழ்நாடு

இறுதிக்கட்டத்தில் மேம்பால பணி; சடையங்குப்பம் மக்கள் மகிழ்ச்சி

Added : ஆக 28, 2021
Share
Advertisement
மணலி : சடையங்குப்பம் மேம்பாலப் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதால், பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சென்னை, மணலி மண்டலம், 16 வார்டில் உள்ள சடையங்குப்பம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடக்கில் கொதஸ்தலை, தெற்கே புழல் உபரி கால்வாய், கிழக்கே பகிங்ஹாம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி, நீர்நிலைகள்

மணலி : சடையங்குப்பம் மேம்பாலப் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதால், பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை, மணலி மண்டலம், 16 வார்டில் உள்ள சடையங்குப்பம் கிராமத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். வடக்கில் கொதஸ்தலை, தெற்கே புழல் உபரி கால்வாய், கிழக்கே பகிங்ஹாம் கால்வாய், ஊருக்குள் சடையங்குப்பம் ஏரி, நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.மழைக் காலங்களில், உபரி நீர் வெளியேற்றத்தின் போது, இக்கிராமத்தை வெள்ள நீர் சூழ்ந்து, மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்படும். சாதாரண நேரங்களில், புழல் உபரி கால்வாய் மற்றும் பகிங்ஹாம் கால்வாயைக் கடக்க, கட்டையாலான பாலம் அமைத்து மக்கள் வெளியேறுகின்றனர்.

அரை நுாற்றாண்டு காலமாக, மேம்பாலம் வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரி வந்ததால், 2010ல் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.பின்னர், பல்வேறு காரணங்களால் தடைபட்ட பால பணிகள், சமீபத்தில் புத்துயிர் பெற்று, விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.அதன்படி, மேம்பால மேல்மட்ட பணிகள் முடிந்துள்ளன. தரையுடன் மேம்பாலம் இணையும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

மழை பாதிப்பு ஏதுமில்லாமல் இருந்தால், இந்த ஆண்டிற்குள் பணிகள் முடிந்து, மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படலாம் என, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், வெள்ளத்தில் சிக்கும் மக்கள், தங்கள் உடைமைகளுடன் எளிதில் வெளியேற முடியும் என்பதால், பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X